PM CARES Fake UPI ID created to steal corona outbreak prevention fund : இந்தியாவில் கொரோனா நோய் பரவலை தடுக்க மக்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை அரசுக்கு அளிக்கலாம் என்று பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான வங்கிக் கணக்கு மற்றும் அது தொடர்பான தகவல்களை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார்.
மோடியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பலரும் தங்களால் இயன்ற அளவு நிதியை பிரதமர் நிவாரண நிதிக் கணக்கிற்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் அதே பெயரில் மற்றொரு போலி யு.பி.ஐ. கணக்கை திறந்து, மக்களின் நிதியை கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயன்றுள்ளது.
அதிகாரப்பூர்வ கணக்கின் ஐ.டி. pmcares@sbi என்று நிறைவடையும். ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட போலி கணக்கோ pmcare@sbi என்று உருவாக்கப்பட்டிருந்தது. இதனை சமூக வலைதளங்களில் பரப்பி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிஸ்வேஷ் குமார் ஜா என்பவர் ட்விட்டர் மூலமாக, எஸ்.பி.ஐ, ஆர்.பி.ஐ, நிதி அமைச்சகம் மற்றும் டெல்லி காவல்துறைக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.
சுதாகரித்துக் கொண்ட டெல்லி காவல்துறை உடனடியாக அந்த வங்கிக் கணக்கின் செயல்பாடுகளை முடக்கினர். வங்கி மூலம், இந்த கணக்கினை தொடங்கியவர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து, காவல்துறை அவர்களை தேடிவருகிறது. எஸ்.பி.ஐ வங்கியும், பிரதமர் பொது நிவாரண நிதிக்கான கணக்கை தெளிவாக குறிப்பிட்டு, போலி கணக்குகள் குறித்து எச்சரிக்கையும் செய்து வருகிறது.
No comments:
Post a Comment