பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக மெய் நிகர் கட்டுப்பாட்டு அறை திறப்பு - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 30 March 2020

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக மெய் நிகர் கட்டுப்பாட்டு அறை திறப்பு

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக மெய் நிகர் கட்டுப்பாட்டு அறை திறப்பு

புதுச்சேரி; புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'மெய் நிகர்' கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் நோய் தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தை, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தயராகும் மாணவர்கள் பயனடையும் வகையில் 'மெய்நிகர்' கட்டுப்பாட்டு அறையை, பள்ளி கல்வி இயக்ககம் உருவாக்கி உள்ளது.

மாணவர்கள் தாங்கள் பொதுத்தேர்வுக்கு தயராகும் பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், இந்த மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்கும் பாடவாரி ஆசிரியர்களை கீழ்கண்ட தொலைபேசி எண்களை நேரிடையாகவோ, வாட்ஸ் ஆப் மூலமோ தொடர்பு கொண்டு, தங்கள் பாட சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.தமிழ் - 95667 28352; ஆங்கிலம் - 99441 98425; கணிதம் - 72009 18139; இயற்பியல் மற்றும் வேதியியல் - 99942 03828; , உயிரியல் - 80154 23235; சமூகவியல் - 99941 96886 ஆகிய எண்களில் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் பத்தாம் வகுப்பு பாடங்களை வீடியோ நிகழ்ச்சியாக, உரிய வல்லுனர்களை கொண்டு, புதுச்சேரியின் உள்ளூர் தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிகளின் பதிவுகளை கீழ்கண்ட 'க்யூஆர்' மூலமாகவோ அல்லது இணைய நுழைவு, யூ டியூப் வாயிலாக மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறலாம்.மேலும் https://www.youtupe.com/channel/uc2102f5yOs2ebcmd68kn13g இணையதளத்தை அனைத்து பத்தாம் வகுப்பு மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group