Join Our KalviSeithi Telegram Group - Click Here
PhonePe, Google Pay, Amazon Pay, PayTM உள்ளிட்ட செயலிகள் மூலம் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழ்காணும் விளக்கத்தை நன்கு படித்து பின்னர் அனுப்பவும்.
கொரோனாவைரஸ் தொற்று காரணமாக உலகமே பேரச்சத்தில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில்கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அன்றாட கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தியவர்கள், ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாது சிறு வணிகர்களும், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. இவர்களுக்கு அன்றாடத் தேவைகளுக்கு மத்தியில் அவர்களுக்கு உணவு வழங்குவது அரசின் கடமையாகிறது. ஒரு பக்கம் தன்னார்வலர்களும் உதவிகரம் நீட்டி வருகின்றனர். அதேபோல், மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்ய பெரிய அளவில் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. இதற்காக, மத்திய மாநில அரசுகள் நிதி உதவியையும் நாடுகின்றன.நன்கொடை அளிக்க முன்வரும் நிறுவனங்கள், பொதுமக்கள் தங்களின் நிதியை கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடையளிக்க...
1. கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்து பணம் செலுத்தலாம். https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html
2. வங்கி மூலமாக:
Bank : Indian Overseas Bank
Branch : Secretariat Branch, Chennai 600 009
S.B. A/c No. : 11720 10000 00070
IFS Code : IOBA0001172
CMPRF PAN : AAAGC0038F
3. UPI மூலம் அனுப்ப: tncmprf@iob
இந்த UPI முகவரியைக் கொண்டு BHIM, PhonePe, Amazon Pay, Google Pay, PayTM, Mobikwik உள்ளிட்ட சேவைகள் மூலம் எளிதாக பணம் அனுப்பலாம்.
மத்திய அரசின் ' அவசர காலங்களில் குடிமக்களுக்கான உதவி மற்றும் மீட்பு நிதி' க்கு நன்கொடை அளிக்க...
1. வங்கி கணக்கு மூலம் அனுப்ப..
Name of the Account : PM CARES
Account Number : 2121PM20202
IFSC Code : SBIN0000691
SWIFT Code : SBININBB104
Name of Bank & Branch : State Bank of India, New Delhi Main Branch
2. UPI ID : pmcares@sbi
Monday, 30 March 2020
Home
Unlabelled
Google Pay, Amazon Pay, PayTM, PhonePe, மூலம் அரசுக்கு நன்கொடை அளிப்பது எப்படி?
Google Pay, Amazon Pay, PayTM, PhonePe, மூலம் அரசுக்கு நன்கொடை அளிப்பது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment