நன்கொடை வழங்குவோருக்கு 100% வரிவிலக்கு அளிக்க அவசர சட்டம் - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 1 April 2020

நன்கொடை வழங்குவோருக்கு 100% வரிவிலக்கு அளிக்க அவசர சட்டம்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
நன்கொடை வழங்குவோருக்கு 100% வரிவிலக்கு அளிக்க அவசர சட்டம்!

பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100% வரிவிலக்கு அளிக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பல்வேறு நிதி சலுகைகள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 24ம் தேதி அறிவித்தார்.

வரிகளை செலுத்துவதற்கான காலக்கெடு 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறிய அவர், கொரோனா நிவாரணப் பணிகளுக்கான ரூ.1,70,000 கோடி மதிப்பில் நிதி தொகுப்பையும் அறிவித்தார். இந்நிலையில், இந்த அறிவிப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.

இந்த அவசர சட்டத்தின்படி வருமான வரி, ஜி.எஸ்.டி. தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கான அவகாசம் மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதற்கான அவகாசமும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் 80(G) பிரிவின் கீழ் 100% வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்த வருமானத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 10% வரிச் சலுகை வரம்பு, இந்த நன்கொடைக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group