விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதில், விவசாயிகளுக்கு எந்த தடையும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
குறு விவசாயிகள், தாங்கள் விளைவித்த பொருட்களை, சந்தைகளுக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, விரிவாக செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், விவசாயிகளின் இந்த பிரச்னை குறித்து, நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் தேவா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதில், விவசாயிகளுக்கு எந்த தடையும் இல்லை என்றும், வேளாண் பொருட்களை அவர்கள் வழக்கம் போல் விற்பனை செய்யலாம், என்றும் தெரிவித்தார்.
மேலும், வங்கிகளில் கடன் பெற்றவர்களின் மாதத் தவணையை, தள்ளி வைப்பது குறித்த கோரிக்கை, மத்திய நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம் என தெரிவித்த முதலமைச்சர், டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, தமிழகம் திரும்பியவர்கள், தாங்களாகவே முன்வந்து, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், என்றும் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment