21 ரேசன் கடைகளில் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு ஏப்ரல் 8-ம் தேதி வரை தடை
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. நிவாரணப் பொருட்களை வாங்குவதற்கு, ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் தெரு வாரியாக பிரிக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், மதுரை மேலூர் மற்றும் கொட்டாம்பட்டியில் உள்ள 21 ரேசன் கடைகளிலும் 1000 ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு ஏப்ரல் 8-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலூரில் 14 கடைகளிலும், கொட்டாம்பட்டியில் 7 கடைகளிலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப் பொருட்கள் வழங்க தற்காலிக தடை விதித்து வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:
Post a Comment