மனித பயன்பாட்டில் இருக்கும் அந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகக்கூடும் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 2 April 2020

மனித பயன்பாட்டில் இருக்கும் அந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகக்கூடும் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
மனித பயன்பாட்டில் இருக்கும் அந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகக்கூடும் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

இப்போது நாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது.
அப்படியிருக்க நமக்கு தெரியாமலே சில பொருட்கள் அழிந்து வருகிறது. அவற்றை குறித்து விரிவாக இந்த காண்போம் .

1.சுற்று வட்டப் பாதையில் இடமில்லை, 2019 ஆண்டில் சுமார் 5 லட்சம் பொருட்கள் பூமியை சுற்றுகின்றன. அதில் வெறும் 2000 பொருட்கள் மட்டுமே செயல்படுகின்றன. அதைத் தவிரப் பிற பொருட்கள் எல்லாம் ராக்கெட் ஏவுதலால் வந்த குப்பைகள். அந்த 5 லட்சம் பொருட்கள் என்பது நம்மால் கண்டுபிடித்து கூற முடிந்த பொருட்கள். மேலும் கண்டுபிடிக்க முடியாமல் பலதும் இருக்கலாம். தொழில்நுட்பம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய சுற்று வட்டப் பாதையில் ஏதேனும் செலுத்துவதற்கு எளிதானதாகவே உள்ளது. ஆனால் அங்குப் பூமிக்கு மேல் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு எந்த போக்குவரத்து கட்டுப்பாடும் இல்லை. அவற்றைச் சுத்தம் செய்வதற்கான எந்த ஒரு வசதியும் கிடையாது .ஆகவே இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால், நாம் மேப் பார்ப்பதற்கும், தொலைத் தொடர்பு வசதிகளுக்கும், வானிலையை தெரிந்து கொள்வதும் பாதிக்கப்படலாம்.
2.மணல்: இங்கு நீங்கள் ஒரு குழப்பத்தில் ஆழக்கூடும், நமது கடற்கரைகள் மற்றும் பாலை வனங்களில் மணல் கொட்டிக் கிடக்கும்போது அது எப்படித் தீர்ந்துபோகும் என்று நினைக்கலாம் . மணலை நாம் அதிகப்படியாக சுரண்டுகிறோம். இயற்கை முறையாக மணல் உற்பத்தி ஆகும் விகிதத்தைக் காட்டிலும் அதனை நாம் பயன்படுத்தும் விகிதம் அதிக அளவில் இருப்பதாக ஐ.நாவின் அறிக்கை சொல்கிறது. மணல் அழிந்து போனால் அது நமது சுற்றுச்சூழல் அமைப்பைப் பெரிதும் அது. அதிகப்படியாக மணலை பயன்படுத்துவதைக் கண்காணிக்கச் சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
3. ஹீலியம்: நாம் சில விழாக்களில் ஹீலியம் நிரப்பிய பலுன்களைப் பறக்கவிட்டிருப்போம். ஆனால் அது குறித்து நாம் என்றாவது கவலைப் பட்டிருக்கிறோமா? ஹீலியமும் நாம் பூமியை தோண்டி கிடைக்கக்கூடிய ஒரு வளம். ஆனால் நம்மிடம் உள்ள இருப்பு சில தசாப்தங்களுக்கு வரும் அளவுக்குத்தான் இருக்கிறது . இந்த ஹீலியம் மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. எம்ஆர்ஐ ஸ்கேன்கள் பயன்படுவதற்கான காந்தத்தைக் குளிர்ச்சியாக வைக்கவும் இந்த ஹீலியம் பயன்படுகிறது.ஆகவே, புற்றுநோயை கண்டறிவதிலும், மூளை மற்றும் முதுகுத் தண்டு காயங்களுக்குமான சிகிச்சையிலும் ஹீலியம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
4.வாழைப்பழங்கள்: தற்போது பெருமளவில் நாம் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாழைப்பழத்துக்குப் பூஞ்சையால் ஏற்படக்கூடிய பனாமா நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நாம் `கேவண்டிஷ்` என்ற ரக வாழைப்பழத்தை உண்டு வருகிறோம். பனாமா நோய் வாழைமரங்களில் விரைவாகப் பரவக்கூடிய தன்மை கொண்டது
5.மண்: மரம் செடிகளுக்குத் தேவையான சத்துக்களை மண்தான் வழங்குகிறது. கடந்த 150 வருடங்களில், உலகின் மண்வளம் பாதியளவு குறைந்துவிட்டது என்று டபள்யு டபள்யு எஃப் என்ற அரசு சாரா நிறுவனம் கூறுகிறது. ஆனால் ஒரு இன்ச் மண் உருவாக 500 வருடங்களாகும். மண் அரிப்பு, தீவிர விவசாயம், மரங்களை அழிப்பது, உலக வெப்பமாதல், ஆகிய அனைத்தும் மண்வளம் குறைவதற்கான காரணங்கள். இந்த மண் வளத்தை நம்பிதான் சர்வதேச உணவு உற்பத்தி இருக்கிறது.
6.பாஸ்பரஸ்: இதை முதலில் கேட்கும்போது பாஸ்பரஸ் என்பது நமது அன்றாட வாழ்வில் அதிகம் தேவைப்படாத ஒன்றாக நினைக்க தோன்றும் . இது உயிரியல் தொடர்பாக மட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. விவசாயத்துக்கு தேவையாக பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கவும் இந்த பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. தாவரம் மற்றும் விலங்குகளின் கழிவு மூலம் இவை மண்ணுக்குள் மீண்டும் செல்வதற்கு பதிலாக, விவசாயப் பொருட்களின் மூலம் நகரத்திற்குள் செல்கிறது நாம் அதை கழுவி சாக்கடைக்குள் விட்டு கொண்டிருக்கிறோம் .

No comments:

Post a Comment

Join Our Telegram Group