21 நாட்கள் ஊரடங்கு மக்களுக்குப் பல வித சிரமங்களைத் தரும். இந்த வகையில் மொபைல் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிப்போருக்கு உதவும் வகையில் புதிய திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
உங்களுக்கு அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று அங்கேயே உங்கள் ஜியோ மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்யமுடியும். ஆக்சிஸ், டிபிசி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஐடிபிஐ, ஐடிஎஃப்சி எனப் பெரும்பாலான வங்கி ஏடிஎம் மையங்களில் ரீசார்ஜ் செய்ய முடியும்.
மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது போலவே ஏடிஎம் கார்டை செருகி ரீசார்ஜ் ஆப்ஷனை தேர்வு செய்து வழிகாட்டலைப் பின்பற்றினால் போதுமானது.
No comments:
Post a Comment