அலங்காரம் இன்றி அழகாக தெரிய வேண்டுமா? - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 2 April 2020

அலங்காரம் இன்றி அழகாக தெரிய வேண்டுமா?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
அலங்காரம் இன்றி அழகாக தெரிய வேண்டுமா?

1. உங்கள் சருமம் எப்போதும் ஈரப்பத்தோடு இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், உடலிலுள்ள துவாரங்கள் வெளியே தெரிந்தும், கண்கள் மற்றும் சருமம் வறண்டும் காணப்படும். ஆகையால், அதிகம் தண்ணீர், நீராகாரம், பழச்சாறு பருகி, உடலை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்கச் செய்யுங்கள்.

2. உடலின் எடை அதிகரிக்காதவாறு, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவாகக் கொள்ள வேண்டும். நீங்கள் உண்ணும் உணவே உங்களின் உட்புற உடலையும், வெளியழகையும் நிர்ணயிக்கும்.

3. உடலைக் கட்டுக்குள் வைக்க, வெளியழகு மேம்பட உடற்பயிற்சிகள் மிக அவசியம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தையாவது உடற்பயிற்சிகள் செய்ய ஒதுக்குங்கள்; உடற்பயிற்சிகள் தெரியவில்லை அல்லது செய்ய முடியவில்லை என்றால், நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்.

4. உடலுக்குக் கேடு விளைவிக்கும், எண்ணெய் உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, உடலின் ஆரோக்கியத்தை அதிகரித்து, அழகை மேம்படுத்தும் பழச்சாறு உட்கொள்ள துவங்குங்கள்.

5. நம் உடல் 70% நீரால் ஆனது. உடல் செயல்கள் அனைத்திற்கும் நீரே ஆதாரம். உடல் செயல்கள் மட்டுமின்றி, உங்கள் அழகிற்கும் நீரே ஆதாரமாக விளங்குகிறது என்ற உண்மையை மக்கள் உணரத் தவறுகின்றனர். நீங்கள் எவ்வளவு அதிகம் தண்ணீர் பருகுகிறீரோ, அவ்வளவு அழகாக உங்கள் தோற்றம் மாறத் தொடங்கும்.

6. நம் உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. பல செல்கள் இறப்பதும், மீண்டும் புதிதாய் தோன்றுவதும் இயற்கையே! அப்படி இறந்த செல்கள் உடலில் தேங்கினால், உங்களுக்கு பருக்கள் மற்றும் தேவையற்ற தழும்புகள் உடலில் தோன்றி, உடலழகைக் குறைக்கும். ஆகையால், இறந்த செல்களை உடலை விட்டு, வெளியேற்ற முயலுங்கள்; இதை நிறைவேற்ற தண்ணீர் பருகுவதே உங்களுக்கு உதவும்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group