கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு பெரிய விடிவுகாலம் இந்த ராசிக்காரர்களுக்கு! - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 8 October 2019

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு பெரிய விடிவுகாலம் இந்த ராசிக்காரர்களுக்கு!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது? குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள் எவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாக குருபகவான் ஸ்தலமான ஆலங்குடியில் எப்போது குருப்பெயர்ச்சி நடத்தப்படுகிறதோ அப்போதுதான் அனைத்து குரு ஸ்தலங்களில் குருப்பெயர்ச்சி நிகழ்த்தப்படுகிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் மங்களகரமான விகாரி வருடம் அக்டோபர் 29-ம் தேதி, ஐப்பசி மாதம் 12-ம் நாள், விசாக நட்சத்திரத்தில் அதிகாலை 3.49-க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். 

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி காலை 9.30-க்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குருபகவான் மாறுகிறார். 

குருபகவான் நம் சரீரத்தில் மூளை பகுதியில் அமர்ந்திருக்கிறார். எனவே சிந்திக்கும் ஆற்றலை நமக்குத் தரக்கூடியவர். பூர்வ ஜென்ம ஞாபகங்களை அளிப்பவர், நல்ல நினைவாற்றலைத் தருபவரும் இவரே. ஆனால், குருபகவான் அஷ்டமத்தில் அமர்ந்து நீச்சமாகி பாபகிரகங்களை பார்க்கும்போது தான் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இது அபகீர்த்தி யோகம் என்றும் சொல்லப்படுகிறது. 

• தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்கஉள்ளார். குரு பகவான் அடுத்த சார்வரி வருடம் அக்டோபர் மாதம் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார்.

• தனுசு ராசியிலிருந்து தனது ஐந்தாம் பார்வையால் மேஷ ராசியையும், ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும், ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்க்கிறார்.

• குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.

• குருபகவான் தனுசு, மீன ராசிக்கு அதிபதியாவர். குருவின் அதிதேவதை இந்திரன். விசாகம், புனர்பூசம், பூரட்டாதி குருபகவானின் நட்சத்திரங்களாகும்.

• குருபகவான் கடக ராசியில் உச்சமடைந்தும், மகர ராசியில் நீசமடைகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் நல்ல நிலையில் இருந்தால் அவர் வாழ்க்கையில் சகலவிதமான நன்மைகளையும் பெறுவார்கள்.

• கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு குருபகவான் தனுசு ராசிக்கு வருகை தருகிறார். அவர் ஆட்சியாக இருக்கிறார். இதனால், தனுசு ராசிக்கு பெரிய விடிவுகாலம் என்று சொல்லலாம். எனவே, தனுசு ராசிக்காரர்கள் அபரிமிதமான நன்மைகளைப் பெறப்போகிறார்கள்.

குருப்பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், சிம்மம் 

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம், கடகம், துலாம், மகரம்

No comments:

Post a Comment

Join Our Telegram Group