கெட்டி மேளம் முழங்க ,நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வீதி உலாவாக அழைத்து வந்து நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் விழா - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 8 October 2019

கெட்டி மேளம் முழங்க ,நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வீதி உலாவாக அழைத்து வந்து நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் விழா

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


கெட்டி மேளம் முழங்க ,நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு  மாலை அணிவித்து  வீதி உலாவாக அழைத்து வந்து நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் விழா          கல்விக் கண் திறப்பு விழா

நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் விழா 




கெட்டி மேளம் முழங்க ,நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு  மாலை அணிவித்து  வீதி உலாவாக அழைத்து வருதல் 

விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை


தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவினையொட்டி புதிய மாணவர்களை மேளம்,நாதஸ்வர இசையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மாணவர் சேர்க்கை கல்வி கண் திறப்பு விழாவாக நடைப் பெற்றது.


               தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கமாகும்.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை விஜயதசமி அன்று பள்ளியில் சேர்க்க வந்திருந்த பெற்றோர்களையும்,மாணவர்களையும் ஆசிரியர்  கருப்பையா   வரவேற்றார்.  



இவ்விழாவானது நடராஜபுரம் காளியம்மன் கோவிலில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளம்,நாதஸ்வர இசையுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ,பெற்றோர்களுடன் பள்ளியை அடைந்தனர்.தேவகோட்டை  ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் தமிழ் துறை தலைவர் முனைவர் . சபா.அருணாச்சலம்   மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் புதிதாய் சேர்ந்த மாணவர்களை நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து அ ,ஆ சொல்ல வைத்தனர்.ஆசிரியை முத்து லெட்சுமி ,செல்வ  மீனாள் புதிய மாணவர்களுக்கு திருக்குறள் வாசித்து பயற்சி அளித்தார்.



மாணவிகள் ஜனஸ்ரீ , நதியா, சிரேகா,சங்கரி ஆகியோர் அபிராமி அந்தாதி சொல்ல வைத்தனர்.குழந்தைகளின் பெற்றோர்கள் செரின் , பாரதி,கௌசல்யா,செல்வி,ரேவதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆசிரியைகள் செல்வமீனாள் ,முத்துமீனாள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஆசிரியர் ஸ்ரீதர்   நன்றி கூறினார்.ஏராளமான பெற்றோர்களும்,பொதுமக்களும் இந்நிகழ்வில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.



பட விளக்கம்:தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விசயதசமியை முன்னிட்டு    கெட்டி மேளம் முழங்க ,நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு  மாலை அணிவித்து  வீதி உலா வந்து  பள்ளியில்  பேரா . சபா .அருணாச்சலம் நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group