உடல் சோர்வு,மன சோர்வு, பலவீனம்,பசியின்மை, வெளிறிய சருமம், வாய்ப்புண் போன்ற குறைபாடுகளுக்கு வைட்டமின் பி 12 குறைபாடும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். - KALVISEITHI | கல்விச்செய்தி

Saturday, 21 December 2019

உடல் சோர்வு,மன சோர்வு, பலவீனம்,பசியின்மை, வெளிறிய சருமம், வாய்ப்புண் போன்ற குறைபாடுகளுக்கு வைட்டமின் பி 12 குறைபாடும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

அதிகப்படியான மன அழுத்தம் மன சோர்வுக்கு காரணம் வாழ்க்கை முறை தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். உளவியல் ரீதியிலான இந்த சோர்வுக்கு வைட்டமின் பி 12 பற்றாக்குறையும் காரணமாக இருக்கலாம் என்கிறார் கள் மருத்துவர்கள்

உடல் சோர்வும், ஓய்வு கேட்கும் உடலுக்கும் காரணம் மன அழுத்தம் இல்லை. அவை உடலில் வைட்டமின் பி 12 குறைபாட் டால் உருவாகலாம். நமது உடலின் ரத்த உற்பத்தி, மூளை செயல்பாடு நரம்பு மண்டலம் செயல்பாடு அனைத்தும் சிறப்பாக செயல்பட வைட்டமின் பி 12 அவசியமானது. இவை குறையும் போது இயல்பாக உடல் சோர்வு அதிகமாகிறது.
அதனால் எப்போதும் மனசோர்வு உங்களை பின் தொடர்ந்தால் உடலில் வைட்டமின் பி 12 அளவை பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையோடு செய்துகொள்வது நல்லது. வைட்டமின் பி 12 அதிகப்படியாக குறையும் போது இரத்த சோகை பாதிப்பு ஏற்படுத்திவிடும் அபாயமுண்டு.

வைட்டமின் பி 12 பற்றாக்குறைக்கு மருத்துவர்கள் மாத்திரைகளை பரிந்துரைத்தாலும் அன்றாடம் நாம் எடுத்துகொள்ளும் உணவுகள் மூலமே அதை எளிதாக பெறலாம் என்றும் சொல்கிறார்கள்.

வைட்டமின் பி 12
பி-காம்ப்ளக்ஸ். என்றழைக்கப்படும் வைட்டமின் நீரில் கரையக்கூடிய வைட்டமின். அதிகப்படியான கொழுப்பு நிறைந்த வைட்டமின்கள் உடலில் தங்கிவிடும். ஆனால் பி12 சிறுநீரகத்திலோ வியர்வை வழியாகவோ வெளியேறிவிடும் என்பதால் தேவைக்கு அதிகமாகவும் எடுத்துகொள்ளலாம்.

இதிலிருக்கும் முக்கியமான எட்டு வைட்டமின்கள் நம்முடைய உடலின் ஆரோக்கிய செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக் கின்றன. வைட்டமின் பி-யில் பி1, பி6,பி7,பி12 என்று நான்கு வகைகள் இருந்தாலும் வைட்டமின் பி 12 முக்கியமானது.இதை சயனோகோபாலமின் என்றும் அழைக்கிறார்கள்.

வேலை என்ன தெரியுமா?
இது இதயத்துக்கு வலு சேர்ப்பதோடு உடலில் இருக்கும் நரம்புகள் பாதிப்படையாமல் இருக்க நரம்பின் மீது மையலின் என்ற உறையை அளித்து நரம்பை பாதுகாக்கிறது. டிஎன்ஏ உருவாக்கத்திலும் பங்குவகிக்கிறது.

நமது உடலில் ரத்தத்தில் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதில் வைட்டமின் பி 12 முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் வயிற்றுப்பகுதியில் உறிஞ்சப்படும் இந்த வைட்டமின் 12 சீராக உறிஞ்சுவதற்கு அமிலச் சுரப்பும் தேவைப்படுகிறது. அதனால் தான் அன்றாடம் வைட்டமின் 12 நிறைந்த உணவு வகைகளை எடுத்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதோடு இரும்புச்சத்தையும் அதிகரிக்கிறது. இதனால் இரத்த சோகை உண்டாகாமல் தடுக்கப்படுகிறது.

மாத்திரைகளை விட உணவில் பெற்றுவிடலாம்

வைட்டமின் பி 12 குறைபாடு
உடலில் சிறிது சிறிதாக வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும் போது நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றது . ரத்த உற்பத்தி யிலும் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் பி 12 குறையும் போது அனீமியா என்றழைக்கப்படும் இரத்த சோகை நோயும் உண்டாக வாய்ப்புண்டு.

பற்றாக்குறை தொடரும் போது கண்பார்வை கோளாறுகளையும் உண்டாக்கும். அதிகப்படியான உடல் சோர்வு, கை, கால் மூட்டுகளில் வலி. நடக்கவே முடியாத அளவுக்கு சோர்வு, வறண்ட சருமம் , பசியின்மை போன்ற குறைபாடுகளை உண் டாக்கும்.

நீரிழிவு பிரச்சனையைக் கொண்டிருப்பவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் வைட்டமின் பி 12 குறைபாட்டையும் கொண்டி ருக்கிறார்கள். சிலருக்கு நினைவாற்றல் திறனும் குறைய தொடங்கும். 50 வயதுக்கு பிறகு குறிப்பிட்ட சதவீத பெண்கள் இந்தக் குறைபாட் டைச் சந்திக்கிறார்கள்.

குறைபாட்டின் அறிகுறி
சருமம் பொலிவிழந்த நிலையில் இருக்கும். வெளிறிய சருமமாக தெரியும். உற்று நோக்காமலேயே இந்த அறிகுறி தெரியும். சருமப் பிரச்சனைகளையும் தரும்.

சிலருக்கு நாக்கு வீக்கமாகவும், பேசுவதற்கு சிரமமாகவும் இருக்கும். நாக்கு சிவந்து காணப்படும். வாய்ப்புண் உண்டாகும்.
கை மற்றும் கால்கள் ஓய்ந்து போவது போன்று இருக்கும் .

காரணம்
பொதுவாக சைவ உணவு சாப்பிடுபவர்கள் இந்த வைட்டமின் பி12 பற்றாக்குறை உண்டாகிறது. அதை ஈடு செய்ய காய்கறி கள் துணையால அதிக சத்துள்ள உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.

நீண்டநாள்களாக நெஞ்செரிச்சல் வாயு பிரச்சனை இருப்பவர்கள் எடுத்துகொள்ளும் மாத்திரைகளாலும். இக்குறைபாடு நேரிடலாம். அவ்வபோது சாப்பிடாமல் விரதம் இருப்பவர்களுக்கும். மெனோபாஸ் காலகட்டத்தை அடையும் பெண்கள் போதிய சத்தான ஆகாரங்களை எடுத்து கொள்ளாத போதும் இந்த பி12 வைட்டமின் குறைய வாய்ப்புண்டு.

வைட்டமின் பி 12 எவ்வளவு இருக்க வேண்டும்.
நாள் ஒன்றுக்கு 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 உடலுக்கு சேர வேண்டும்.மேலும் இவை கொழுப்பில் கரையாமல் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி 12 என்பதால் இந்த வைட்டமின் அதிகமாக இருந்தாலும் எவ்வித பாதிப்பும் உண்டா காது. சரி வைட்டமின் பி 12 எந்த உணவுகளில் நிறைந்திருக்கிறது. அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group