எடை அதிகமா இருக்குன்னு நினைக்கிறீங்களா.. உங்க obesity காரணம் என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்கங்க... - KALVISEITHI | கல்விச்செய்தி

Saturday, 21 December 2019

எடை அதிகமா இருக்குன்னு நினைக்கிறீங்களா.. உங்க obesity காரணம் என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்கங்க...

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

அதிகமா சாப்பிடறவங்க ஒல்லியா இருக்காங்க. நான் கொஞ்சமாத்தான் சாப்பிடறேன் ஆனா ஏன் குண்டாயிருக்கிறேன்னு கேட்கிறவங்களும் நம்மோடு இணைந்திருக்கிறார்கள். காரணம் அதி கப்படியான உடல் எடைக்கு உணவு பழக்கம் மட்டுமல்ல இதுவும் ஒரு காரணம்.உடல் எடையை அதிகரிக்காமல் இருக்க இந்த உணவை எடுக்கிறேன் என்று தவறான முறையில் உணவை உட் கொள்வதும் ஒரு காரணம். இன்னும் இன்னும் பல காரணங்கள் உண்டு. ஆனால் அது தெரிந்தால் தான் அதற்குரிய தீர்வும் நீங்கள் கடைபிடிக்கும் போது பலன் கொடுக்கும்.

​உடல் பருமன்

இதனால் தான் அதிக எடை உண்டாகிறது என்று யாராலும் உறுதிபட சொல்ல முடியாது. பருமனாக இருப்பவர்கள் சொல்லும் காரணங்களும் பருமனை உண்டாக்கும் என்று சொல்ல முடியாது.உடலில் அதிகமாக மிதமிஞ்சியிருக்கும் கொழுப்புகள் தான் உடல் பருமனை உண்டாக்குகிறது. இவை உணவால் மட்டுமே வருவதில்லை.

உடலுக்கு கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதம் போன்ற மூன்றும் தான் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இவை அதிகரிக்கும் போது அவற்றை உடல் சேமித்து வைக்க நினைக்கிறது. அவைதான் நம் உடலில் ஆங்காங்கே கொழுப்பாக உட்கார்ந்து விடுகிறது. எனினும் இதை மட்டுமே காரணமாக எடுதுகொள்ள முடியாது பல்வேறு காரணங்கள் சேர்ந்து தான் நம் உடலை பருமனாக்கி விடுகிறது என்கிறது ஆய்வுகள்.

மரபணு

உடல் எடையைத் தீர்மானிப்பதில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மூளையில் சுரக்கும் ஹார்மோன்கள், கொழுப்பு செல்கள் லெப்டின் என்னும் ஹார்மோனையும், கணையம் இன்சுலின் என்னும் ஹார்மோனையும் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் இணைந்து தான் மனிதனுக்கு பசியை உண்டாக்குகிறது. இதனால் அதிக உணவு சாப்பிடுபவர்கள் உடல் பருமனாக இல்லாமல் இருப்பார் கள். அதே நேரம் குறைந்த அளவே எடுத்துகொண்டாலும் உடல் பருமனுக்கு உள்ளாவார்கள்.

இந்த ஹார்மோன்களின் செயல்பாடு அளவுக்கு அதிகமாக இருக்கும்போதுதான் சிறுவயதிலேயே அதிக எடைக்கு 100,200,300 கிலோ போன்ற அதிகப்படியான உடல் எடையை உண்டாக்கிவிடுகிறது. இதை பேப்பரில் படித்து தெரிந்துகொள்கிறோம். இதனால் தான் குண்டு மனிதர்கள் உருவாகிறார் கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

​உடல் உழைப்பு

உடலை வருத்தி உழைப்பை அதிகரித்தாலும் உடல் பருமன் பிரச்சனை குறைவதில்லை என்ற கவ லை பலருக்கும் உண்டு. அதற்கு உதாரணமாக நம் முன்னோர்களையும் உதாரணமாக சொல்வார் கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அவர்கள் ஓய்வு என்று ஓரிடத்தில் அமர்ந்ததில்லை. அதை ஈடு செலுத்தும் வகையில் நாங்கள் உடலுக்கு உடற்பயிற்சியும் தருகிறோம். ஆனாலும் உடல் பருமன் குறையாமல் அதிகரிக்கிறது என்று புலம்புவர்களும் உண்டு.

ஆனால் இன்று பெரும்பாலான உடல் உழைப்பில் ஈடுபடுவர்களும் கூட அதிக எடையோடு தான் வளைய வருகிறார்கள் என்பதை கவனித்தாலே தெரியும். உடல் பருமனாக இருந்தால் உடல் உழை ப்பு குறைவாக இருக்கும் என்ற எண்ணமும் பலருக்கு உண்டு. ஆனால் அன்றாட பணியில் வேலை யில் இருப்பவர்களும் அதிக எடையோடு வலம் வருவதை பார்க்கலாம். இன்று இருபாலரும் காலை முதல் இரவு வரை பணியில் இருப்பதும் உழைப்பதும் அதிகரித்துதான் இருக்கிறது. ஆக உடல் உழைப்பு குறைவால் தான் உடல் பருமன் என்பது ஒரு காரணமே தவிர அது மட்டும் காரணமல்ல.

​உணவு பழக்கம்

உணவு முறை பழக்கத்தில் உடல் பருமன் என்றால் அதற்கு காரணம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் தான். மாவுச்சத்து நிறைந்த இந்த உணவுகளை எடுக்கும் போது இவைகணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க செய்கிறது. மாவுச்சத்திலிருந்து பெறப்படும் குளுக்கோஸ் ஆனது இரண்டு மணிநேரத்தில் எரிசக்தி அல்லது கிளைகோஜனாக மாற்றி விடும். அதிகப்படியான க்ளூக்கோஸை உடலில் இருக்கும் திசுக்களில் சேமித்துவிடும்.

இதனால் பசி உணர்வு கட்டுக்குள் வராது. பசி உணர்வு இருக்கவே செய்யும். குறிப்பாக பசி உணர் வை தூண்டவே செய்யும்.அதனால் உணவு அதிகப்படியாக எடுத்து உடல் பருமனை வரவழைத்து விடுகிறோம்.

இந்த கார்போஹைட்ரேட் உணவை குறைத்து எடுக்கும் போது அதிகப்படியான கொழுப்பு திசுக்க ளில் சேர்வது தடுக்கப்படும். அதே நேரம் நார்ச்சத்து குறைந்த உணவுகளை எடுத்துகொண்டாலும் பசி உணர்வு குறையாது. ஆனால் கார்போஹைட்ரேட் உணவுடன் நார்ச்சத்து நிறைந்த உணவையும் சேர்த்து எடுக்கும் போது உடல் பருமன் பிரச்சனை உண்டாகாது.

​சந்தோஷமும் துக்கமும்

மகிழ்ச்சியாக இருக்கும் போது உடல் எடை அதிகரிக்க கூடும். அதே நேரம் கவலையாக இருக்கும் போதும் உடல் எடை அதிகரிக்கிறது காரணம் கவலையை மறக்க சந்தோஷமாக இருக்கும் போதும் அதிகப்படியான உணவை எடுத்துகொள்வார்கள்.

சிலருக்கு வீட்டு உணவுகளோடு நவீன உணவுகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும் குறிப்பாக இன் றைய தலைமுறையினருக்கு. நெய்யும், இறைச்சியும் உடல் எடையைக் கூட்டும் என்று பேக்கரி உணவுகள், சாட் வகைகள், செயற்கை குளிர்பானங்களை எடுத்துகொள்கிறார்கள். ஆனால் இத்த கைய நவீன உணவுகள் தான் ஹார்மோனில் அதிகப்படியான மாற்றங்களை உண்டாக்கி உடல் பருமனை உண்டாக்கிவிடுகிறது.

ஆக உடல் பருமனை உண்டாக்கும் வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் தெளிவான விழிப்புணர்வு இருந்தால் உடல் பருமன் பிரச்சனையை எளிதாக கையாளலாம்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group