மேஷம்
நீங்கள் இந்த வருடத்தை சிறப்பாக தொடங்குவீர்கள். உங்களது வேலையில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம்; உங்களது கவனம் முழுவதும் தொழில் மீதே இருக்கும். எதிர்காலத்துக்கும் நீங்கள் திட்டமிடுவீர்கள். இந்த வருடத்தில் உங்களது வேலையில் ஒரு ஸ்திரத்தன்மையை கொண்டு வருவீர்கள். உங்களது வேலையில் சிக்கல் இருந்தாலோ அல்லது அரசு அல்லது சட்டம் தொடர்பான விவகாரங்கள் நிலுவையில் இருந்தாலோ, அதில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்.
உங்களது வேலை மற்றும் சொந்த நன்மைகளுக்கு சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவீர்கள். இந்த வருடத்தில் உங்களது உறவுகள் செழிப்படையும். நண்பர்களுடன் உங்களது தொடர்பு குறையும், ஆனால் உங்களுக்கு பிடித்தமானவருடன் உங்களது நெருக்கம் அதிகரிக்கக்கூடும். இந்த வருடத்தில் உறவுகளின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துக்கொள்ளக் கூடும். செப்டம்பர் மாதத்துக்கு பிறகு உங்களது வருவாய் சீரில்லாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன, அதனால் இந்த கட்டத்தில் உங்களது செலவுகள் மீது கவனமாக இருக்க வேண்டும். மே மாதத்தில், அரசு அல்லது மேலதிகாரிகளிடம் இருந்து நன்மைகளை எதிர்பார்க்கலாம். பெரியவர்களின் உதவியுடன் மூதாதையர் சொத்து தொடர்பான விவகாரங்களுக்கு முடிவு வரும். உடல்நலம் உங்களுக்கு ஆதரவு அளித்தாலும், இந்த வருடத்தின் இறுதியில், உங்களுக்கு சளி அல்லது இருமல் தொடர்பான சிக்கல்கள் ஏற்படும். எனவே உங்களின் உடல்நலம் மட்டுமே உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
இந்த வருடத்தின் தொடக்கம் மிகவும் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் காலப்போக்கில் நிலைமை அனுகூலமாக இருப்பதை உணரலாம். இந்த வருடத்தின் தொடக்கத்தில் நீங்கள் சொந்த மற்றும் தொழில் வாழ்க்கையில் தீவிரமாக இருக்கக்கூடும், ஆனால் உங்களது உற்சாகம் மற்றவர்களுக்கு சிக்கல் உருவாக்காமல் இருக்க வேண்டும். வாழ்க்கையின் உண்மையான சாரத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் மற்றும் இந்த வருடம் பரிவும் உற்சாகமும் நிறைந்து இருக்கும். உங்களது உறவுகளை நீங்கள் சந்தோஷமாக அனுபவிப்பீர்கள் மற்றும் சொந்த வாழ்க்கையில் இருக்கும் அனுகூலமான நிலை உங்களது தொழில் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஆனால் ஒவ்வொரு தருணத்தையும் அதே பேரார்வத்துடன் சந்தோஷமாக வாழ்வதில் தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது. நீங்கள் கூட்டுத்தொழிலில் இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். இறுதி மூன்று மாதங்களின் போது, எந்த ஒப்பந்ததிலும் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்குமுன், உங்களது வாழ்க்கை துணையிடம் பேசி அவரது கருத்துக்களையும் புரிந்துகொள்ள வேண்டும். ஏப்ரல் முதல் ஜூலை வரை உள்ள காலத்தில் உங்களது வாழ்க்கை துணையுடன் நெருக்கம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் ஆடைகள் மற்றும் நகைகளுக்கு செலவு செய்வீர்கள். நிதிதிட்டத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும், மற்றும் எதிர்கால நன்மைகளுக்கு தங்கம் அல்லது வெள்ளியில் முதலீடு செய்யவேண்டும். மார்ச்-ஏப்ரல் காலகட்டத்தில், உங்களுக்கு வருவாய் வரும் வழிகளில் சில மாற்றம் ஏற்படக்கூடும். முதல் நான்கு மாதங்களின் போது மாணவர்கள் தங்களது படிப்பில் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும். இந்த வருடத்தின் இறுதியில், உங்களது வேலை அல்லது சொந்த தேவைகளுக்கு வெளிநாடு செல்ல முயற்சி செய்தால், அதில் தாமதம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த வருடத்தின் முதல் பாதியில் உங்களது உடல்நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் வரை, மூக்கு, காது அல்லது தொண்டை தொடர்பான சிக்கல்களுக்கு வாய்ப்புள்ளது. இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் உங்களது பேச்சு தெளிவாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள காலத்தில் உங்களது எதிரிகளிடம் விழிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
இந்த வருடம் உங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை தருவதாக இருக்காது, உங்களது நிதி, வேலை மற்றும் உறவுகள் சோதனைக்குள்ளாகும். உங்களது நடவடிக்கைகளில் அதிக தெளிவும் வெளிப்படைதன்மையையும் கொண்டு வரவேண்டும். வாய்ப்புக்கள் உங்கள் கை நழுவி செல்வது போல உங்களுக்கு தோன்றலாம், ஆனால் அதைப் போன்ற சமயங்களில் இது ஒரு வாழ்க்கை மற்றும் இதில் உற்சாகம், நம்பிக்கை மற்றும் திட்டமிட்டு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது காலப்போக்கில் உங்களது வாழ்க்கையை மாற்றிவிடும். கூட்டுத்தொழில் உங்களுக்கு அவ்வளவாக நன்மையை தராது, எந்த ஒரு நிதி பரிவர்த்தனையிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த வருடத்தின் இரண்டாம் பாதி உங்களுக்கு சாதகமாக அமையக்கூடும். இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களின் போது எதிர்பாராத செலவுகள் காரணமாக கடன் வாங்கும் எண்ணம் தோன்றலாம், ஆனால் கடன் ஏதும் வாங்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. உங்களது மேலதிகாரிகள் அல்லது அரசுதுறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம் என்று உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. உங்களது குடும்பத்தினருடன் உங்களுக்கு நெருக்கம் ஏற்படும். உங்களது பேச்சு மரியாதையுடனும் இனிமையாகவும் இருக்க வேண்டும். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், அவர்களது தீவிரமான மன உறுதியால் எதிர்பார்த்த முடிவுகளை பெறக்கூடும். இந்த வருடத்தின் மத்தியில், வசதியான வாழ்க்கையை அமைக்க உங்களது செலவு அதிகரிக்கக்கூடும். உங்களது நிதி நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும். இந்த வருடத்தில் சில உடல்நல கோளாறுகள் காரணமாக உங்களது வலிமையை இழக்கக்கூடும், அதனால் உங்களது உடல்நலத்தின் மீது கவனமாக இருக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
இந்த வருடம் உங்களுக்கு போராட்டம் மிகுந்ததாக இருப்பினும் அருமையான நினைவுகளையும் தருவதாக இருக்கும். உங்களது வாழ்க்கையில் நேர்மறை எண்ணத்துடன் முன்னேற வேண்டும். இந்த வருடம் முழுவதும் உங்களது உணர்வுகள் குறைந்தே இருக்கும் மற்றும் உங்களுக்கு பிடித்தமானவர்களிடம் இருந்து விலகியே இருப்பீர்கள். அத்தகைய சூழலில் உங்களுக்கு பிடித்தமானவரின் எண்ணத்தையும் புரிந்துக்கொள்ள வேண்டும். உத்யோகஸ்தர்கள் தங்களது பணியில் சில மாற்றங்களை உணரலாம், அவை காலப்போக்கில் நன்மையை தரும். உங்களது வேலை பளு அதிகரித்து, பணிகளை முடிப்பது கடினமாக இருக்கக்கூடும். இருப்பினும், நிலைமை பிப்ரவரி மாதத்தில் இருந்து முன்னேறக்கூடும். அதன் பிறகு நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள், ஆனால் உங்களது சகாக்களிடம் சச்சரவுகளை தவிர்க்க வேண்டும். பிப்ரவரி மாதத்துக்கு பிறகு கூட்டு வியாபாரம் அல்லது தொழிலில் தாமதம் ஏற்படலாம், அதனால் அதை முடிந்தவரை அதை துரிதப்படுத்தவும். உறவுகளை பொறுத்தவரை இந்த வருடம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், உங்களது காதல் வாழ்க்கையை பொறுத்தவரை இந்த வருடத்தின் மத்தியில் உள்ள பகுதி மிகவும் சாதகமாக இருக்கும். உங்களது காதல் வாழ்க்கையை மேம்படுத்த புதிய முயற்சியோ அல்லது தீவிரமான முயற்சியோ எடுக்க வேண்டியிருக்கும். நீங்களும் உங்களது வாழ்க்கை துணையும் ஒருவரை ஒருவர் சந்தோஷப்படுத்த பரிசுகளையும் பரிமாறிக்கொள்ளலாம். செப்டெம்பர் மாதம் வரை யாருக்கும் பணத்தை கடனாக தரவேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த வருடத்தின் இறுதியில் முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து சில நன்மைகளுக்கு வாய்புள்ளது. செப்டெம்பர் மாதத்துக்கு பிறகு பண இழப்புக்கு அதிக வாய்புகள் இருப்பதால் பங்குசந்தை அல்லது சூதாட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பாக இருக்கும், ஆனால் அவர்கள் போட்டித்தேர்வை எழுதுகிறார்கள் என்றால், கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்களின் உடல்நலத்தின் மீது கவனக்குறைவாக இருப்பதால், செலவு செய்ய நேரிடும். செப்டெம்பர் மாதத்துக்கு பிறகு, சில சமயங்களில் சிறிய நோய்களும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதால் உங்களது உடல்நலத்தின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வருடத்தில் நீரழிவு நோய் மற்றும் கொழுப்பு தொடர்பான சிக்கல்களை நீங்கள் சந்திக்கக்கூடும்.
சிம்மம்
இந்த வருடம் சிறப்பான உற்சாகம் மற்றும் சுறுசுறுப்பை உங்களுக்கு கொண்டு வரக்கூடும். ஜனவரி மாத இறுதியில், நீங்கள் இது வரை தெளிவில்லாமல் இருந்த உறவில், தெளிவு ஏற்பட்டு உறுதியுடன் இருப்பீர்கள். உங்களது வாழ்வில் புதிதாக கற்றுக்கொள்வீர்கள். உங்களின் வாழ்வில் வசதிகளை ஏற்படுத்துவதற்கு நீங்கள் செலவு செய்யக்கூடும். இந்த வருடத்தில் நீங்கள் பழைய உறவினை விட்டு விலகி புதிய உறவில் ஈடுபடக்கூடும். அதைப்போன்ற முடிவுகளை எடுக்கும்போது தேவையற்ற அனுமானங்களில் மனதை அலைய விடாமல் நடைமுறைக்கு ஏற்றவாறு முடிவு எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. புதிய உறவினை தொடங்குவதில் மற்றும் புதிய வாழ்க்கை துணையை தேடுவதில் அவரசரப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. திருமணம் தொடர்பான முடிவுகளை எடுக்க, செப்டம்பர் மாதம் சாதகமாக இருக்கும். இந்த வருடத்தின் இறுதியில் உங்கள் குடும்பத்தினரிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்களது வேலைக்காக நீங்கள் ஒரு புதிய சொத்தினை வாங்கக்கூடும். உங்களது வியாபாரத்துக்கு புதிய சொத்தினை வாங்கவேண்டும் என்றால், இந்த வருடத்தின் முதல் பாதி அதுக்கு சாதகமாக அமையும். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் உங்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விவகாரங்களில் ஈடுபடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இந்த வருடத்தின் மத்தியில் உங்களது வேலையில் புதிய சிந்தனைகளை செயல்முறை படுத்துவதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். படிப்பில் உங்களது முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருந்தாலும், பிப்ரவரியில் இருந்து உங்களுக்கு சிறிது ஆறுதல் கிடைக்கும்; உங்களது நிலைமை செப்டம்பர் மாதத்துக்கு பிறகு முன்னேற்றம் காணும். ஜனவரிக்கு பிறகு சில உடல்நல கோளாறுகளுக்கு வாய்ப்புகள் உள்ளன. அதிகமான வேலை சுமையும் உங்களுக்கு சோம்பலை ஏற்படுத்தும்.
கன்னி
இந்த வருடம் உங்களுக்கு புதிய வாய்ப்புக்கள் மற்றும் வெற்றிக்கான நம்பிக்கையை கொண்டு வரும். உங்களின் நிதி நிலைமை முன்னேற்றத்தை கண்டாலும், உங்கள் குடும்பத்தின் மீது கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் பேசும்போது நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும்; மற்றும் எப்போதும் நீங்கள் சொல்வது மட்டுமே சரி என்ற எண்ணம் தவறு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிப்ரவரிக்கு பிறகு குடும்ப விவகாரங்கள் சீரடையும். உங்களின் காதல் வாழ்க்கைக்கு நீங்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். புதிய உறவினை நீங்கள் உருவாக்க விரும்பினால், அதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த வருடம் திருமணமான தம்பதியர்களுக்கு சாதகமாக இருக்கக்கூடும். வியாபாரத்தில், நீங்கள் ஆரோக்கியமான போட்டியை சந்திக்கக்கூடும். உங்களது நிதி நிலைமை நன்றாக இருக்கும், ஆனால் உங்களது குடும்பத்துக்காக நீங்கள் செய்த உழைப்புக்கு தகுந்த மதிப்பு கிடைக்காது. பிப்ரவரி மாதத்தில் இருந்து உங்களின் குழந்தைகளின் பண உதவி குறையக்கூடும். மாணவர்கள் இந்த வருடத்தை நல்ல நேர்மறையாக தொடங்கலாம். பிப்ரவரி மாத முடிவில் இருந்து நீங்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். செப்டம்பர் மாதத்தில் இருந்து உங்கள் நண்பர்களுடன் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் எண்ணம் இருந்தால், இந்த வருட இறுதியில் அதில் வெற்றி கிடைக்கும். இந்த வருடம் உங்களின் உடல்நலத்துக்கு சாதகமாக இருக்கக்கூடும். உங்களது உடல்நலத்தை பராமரிக்க சரிவிகித உணவு மற்றும் முறையான ஓய்வையும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உடல்நலத்துடன் இருக்க தியானம் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றையும் நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம்.
துலாம்
இந்த வருடத்தில் உங்களது கடுமையான முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். தொழில், கல்வி, நிதி மற்றும் உறவுகளை மேம்படுத்த நீங்கள் இதுவரை எடுத்த முயற்சிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த வருடத்தின் தொடக்கத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களில் சிக்கல்கள் ஏற்படலாம், மற்றும் அது பிப்ரவரிக்கு பின் சீரடையும். இந்த வாரத்தின் முதல் பாதியில் மூதாதையர் சொத்து தொடர்பான விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் தந்தையிடம் இருந்து சில நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்களது நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்; வருவாய் வழிகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெறுவீர்கள். இருந்தாலும் செப்டம்பருக்கு பிறகு, உங்களது வருவாய் ஸ்திரமாக இருக்காது. நீங்கள் நல்ல வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ள நிதி நெருக்கடிகள் இல்லாமல் இருக்க முன்கூட்டியே திட்டமிடவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த வருடத்தில் உங்களது உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களது நண்பர்களை அவ்வளவாக சந்திக்க முடியாமல் போகலாம், மற்றும் அதனால் அவர்களும் உங்கள் மீது வருத்தத்துடன் இருக்க வாய்ப்புள்ளது. இதில் யாருடைய தவறும் இல்லை மற்றும் இது காலத்தின் நியதி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏப்ரல் மாதத்துக்கு பிறகு, சூழ்நிலையில் முன்னேற்றம் தெரியும். ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை, உங்களுக்கு பிடித்தமானவரை நினைத்து வருத்தத்துடன் இருக்க வாய்ப்பு இருந்தாலும், மற்றபடி உங்களது காதல் வாழ்க்கை சந்தோஷமாக அனுபவிக்கக்கூடும். உங்களது காதலி அல்லது வாழ்க்கை துணையுடன் உங்களது நெருக்கம் அதிகரிக்கக்கூடும். மாணவர்களுக்கு இந்த வருடம் அனுகூலமாக இருக்கக்கூடும்; தீய எண்ணங்களை தரும் போலி நண்பர்களிடமிருந்து விலகுமாறு அவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வெளிநாட்டில் படிக்க நினைக்கும் உங்களது ஆசை இந்த வருடம் நிறைவேறும். இந்த வருடத்தில் நீங்கள் உடல் ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருக்கக்கூடும், இருந்தாலும் சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டு காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
இந்த வருடத்தில் நிலுவையில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். அது உங்களுக்கு ஒரு புதிய வழியையும் காண்பிக்கும். மற்றவர்களுடன் உங்களது தொடர்பு குறையக்கூடும்; இருந்தாலும் பிப்ரவரிக்கு பிறகு நீங்கள் புதியவர்களை சந்தித்து அவர்களுடன் சாதுர்யமான விவாதங்கள் மற்றும் பயனுள்ள உரையாடலில் ஈடுபட வாய்ப்புள்ளது. சமூக வலைதளத்தில் நீங்கள் தீவிரமடையக்கூடும். மற்றவர்கள் நீங்கள் சொல்வதை தவறாக புரிந்துகொள்வதை தவிர்க்க தெளிவாக பேசவேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் விலை உயர்ந்த மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்கக்கூடும். எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு நீங்கள் வெளிச்சத்தை நோக்கி செல்வதால், உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். விலையுயர்ந்த பொழுபோக்குகளில் ஈடுபட உங்களுக்கு எந்த தடையும் இல்லாவிட்டாலும், வருவாயை கணக்கில் கொண்டு நீங்கள் செலவு செய்யவேண்டும். உங்களது தொழிலில் சிறந்த சிறந்த பலன்கள் கிடைக்கும். நீங்கள் கூட்டுத்தொழிலில் இருந்தால், இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களின் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவுகள் உங்களுக்கு அதிஷ்டம் தருவதாக இருக்கும்; உங்களுக்கு பிடித்தமானவர் உங்களது வேலையிலும் மிகவும் ஆதரவாக இருப்பார். உங்களுக்கும் உங்களின் வாழ்க்கை துணைக்கு இடையே நல்ல உடன்பாடும் பிணைப்பும் இருக்கும். ஏப்ரல் முதல் ஜூலை வரை உங்களது காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்களது நிதி நிலைமை இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் மேம்படும். ஆனால் உங்களது வீண் செலவுகளை கட்டுப்படுத்தவில்லை என்றால், பண விஷயத்தில் மற்றவர்களின் உதவியை நாடவேண்டி இருக்கும். உங்களது வருவாய் நிரந்தரமாக இல்லாததால், உங்களது நிதி விவகாரங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நன்மை தருவதாக இருக்கும்; இருப்பினும் அவர்கள் தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு, வல்லுனர்களின் அறிவுரையை பெறவேண்டும். மாணவர்களை பொறுத்தவரை, செப்டம்பர் மாதத்துக்கு பிறகு நீங்கள் படிப்பில் சில போராட்டங்களை சந்திக்க நேரிடலாம். உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் மூக்கு, காது மற்றும் தொண்டை தொடர்பான சிக்கல்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
தனுசு
இந்த வருடம் உங்களுக்கு சுமாரான பலன்களையே தரும். ஒரே சமயத்தில் நீங்கள் மகிழ்ச்சி மற்றும் குழப்பத்தை சந்திக்க நேரிடலாம். வாழ்க்கை உங்களுக்கு மெதுவாக நகர்ந்து செல்வது போல தோன்றினாலும், பிப்ரவரிக்கு பிறகு நிலைமையில் முன்னேற்றத்தை காணலாம். வாழ்க்கையை பற்றி நேர்மறை எண்ணத்துடன் இருப்பீர்கள். நிதி நிலைமையும் முன்னேற்றம் பெறும். கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள உங்களது மனநிலையை திடப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் வாழ்க்கைத்துணை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களிடம் ஒரு சுமூகமான உறவை பராமரிக்க விட்டுக்கொடுத்து அல்லது சமரசம் செய்துக்கொள்ள வேண்டியிருக்கும். உங்களது வாழ்க்கைத்துணையிடம் விட்டுக்கொடுத்து சென்று, உங்களது செயல்களால் அவர்களின் இதயத்தில் இடம் பிடித்து நம்பிக்கையையும் பெறவேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. செப்டம்பர் மாதத்துக்கு பிறகு உங்களது உறவை சந்தோஷமாக அனுபவிக்க முடியும். இந்த வருடத்தின் தொடக்கத்தில், பொழுதுபோக்கு செலவுகள் ஏறப்படக்கூடும். உங்களது தொழில் தொடர்பான பணிகள் மெதுவாக செல்வதற்கும்; ஒப்பந்தம் கையெழுத்திடுவதிலும் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பிப்ரவரி மாதத்தின் மத்தியில் இருந்து உங்களது வருமானம் நிலையின்றி இருக்கக்கூடும். அதனால் நீங்கள் முன்கூட்டியே திட்டமிடவேண்டும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களை நீங்கள் ஊக்குவித்து, உற்சாகத்தை அதிகரித்து பணிகளை முடிக்க வேண்டும். வியாபாரிகள் மற்றவர்களை நம்புவதை தவிர்க்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் சமூக மற்றும் மதம் தொடர்பான விவகாரங்களின் மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். மாணவர்களுக்கு இந்த வருடம் கடினமாக இருக்கும் மற்றும் அதனால் அவர்கள் தங்களது பாடத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். இந்த வருடம் உங்களது உடல்நிலை மிகவும் சுமாராக இருக்கும்.
மகரம்
இந்த வருடம் உங்களுக்கு சாதகமாக அமையும்; முன்னேறுவதற்கு உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களது வேலை தொடர்பான இலக்குகளை அடைவீர்கள். உங்களது இலக்குகளை அடைய புதிய திட்டங்களை தீட்டுவதற்கு இந்த வருடம் அனுகூலமாக இருக்கும். உங்களது வேலையில் ஆக்கப்பூர்வ திறனை செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளன. பிப்ரவரி மாதத்துக்கு பிறகு வேலை உங்களை சோர்வடைய செய்தாலும், உங்களது உற்சாகம் அற்புதங்களை செய்யக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களது மேலதிகாரி அல்லது முதலாளியிடம் இருந்து பாராட்டும் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வருடத்தில் உங்களது திறமைகளை வெளிக்கொண்டு வர வாய்ப்புள்ளது, ஆனால் அதற்கு நீங்கள் உங்களையே ஊக்குவித்துக்கொள்ள வேண்டும். இந்த வருடத்தில் நீங்கள் புதிதாக ஏதேனும் தொடங்கலாம், ஆனால் உங்களிடம் இருக்கும் திறமைகள் மற்றும் அறிவை வளர்த்துக்கொள்வதால் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களது சொந்த வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், ஆனால் அதைப்போன்ற சமயத்தில் விட்டுக்கொடுத்து செல்வது பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை மீது அதிக கவனத்துடன் இருப்பீர்கள். காதல் அல்லது திருமண வாழ்க்கைக்கு, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களது உறவினை புதிய நிலை அல்லது கட்டத்துக்கு எடுத்து செல்வது தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடும். உங்களது வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவத்தை கற்பிக்கும் சில சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. உங்களது வேலை தொடர்பான விவகாரங்களுக்கு பெரியவர்களின் அறிவுரையை பெறவேண்டும். மார்ச் முதல் மே மாதம் வரை, உங்களது வேலையில் சிறந்த வாய்ப்புக்களை எதிர்பார்க்கலாம். இந்த வருடத்தின் தொடக்கம் உங்களது காதல் வாழ்க்கைக்கு அனுகூலமாக இருக்கும். ஆனால் பிப்ரவரிக்கு பிறகு, உங்களது வாழ்க்கைத்துணையை திருப்திப்படுத்த அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு இந்த வருடம் சிறப்பாக இருக்கும், ஆனால் இரண்டாம் பாதியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் புதிய சவால்களை கொண்டு வரக்கூடும். இந்த வருடத்தின் தொடக்கம் உங்களது உடல்நலத்துக்கு சாதகமாக இருந்தாலும், பருவகால மாற்றங்கள் அதனை பாதிக்கும் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உண்பதன் மூலம் அதனை பராமரிக்க முடியும்.
கும்பம்
இந்த வருடம் உங்களுக்கு போராட்டம் மற்றும் வெற்றி இரண்டையும் கொண்டு வரும். இந்த வருடம் முழுவதிலும் உங்களது உறவுகளின் மீது கவனமாக இருக்க வேண்டும். மற்ற மாதங்களை விட இறுதி மூன்று மாதங்கள் மிகவும் சாதாரணமாக இருந்தாலும், உங்களது குடும்பத்தினருடனான உறவின் மீது கவனமாக இருக்க வேண்டும். உங்களது உறவுகளின் மீது நீங்கள் தெளிவின்றி இருப்பீர்கள். செப்டம்பர் மாதம் வரை, காதல் வாழ்க்கை தொடர்பாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் நடைமுறைக்கு ஏற்றார் போல இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் ஒரு வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது கூட ஒரு தவறான முடிவாக இருக்கலாம். நீங்கள் ஏற்கனவே ஒரு உறவில் இருந்தால், உங்களது வாழ்க்கைத்துணையை திருப்தி படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் உடல்நலத்தின் மீது பொறுப்புடன் இருக்க வேண்டும். உங்களது தொழிலில் சில சவால்கள் வரக்கூடும். சட்டம் மற்றும் அரசு தொடர்பான சிக்கல்களில் இருந்து விலகியே இருங்கள் இல்லையென்றால் அது உங்களது புகழ் மற்றும் பணத்தை விரைவில் வீணடித்து விடும். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தொழிநுட்ப துறை உங்களுக்கு நல்ல வருமானத்தை தந்தாலும், பிப்ரவரிக்கு பிறகு சோர்வடையும். நன்மைகள் உங்களை வந்து சேருவதற்கு தாமதம் ஏற்பட்டாலும், இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் நிலைமையில் முன்னேற்றத்தை காணலாம். உங்களது வேலையை மாற்றுவதற்கு இந்த வருடம் அனுகூலமாக இருக்கும். உங்களது தொழில்துறை வட்டாரத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களை சந்திப்பது மற்றும் விருந்து அல்லது கருத்தரங்கில் கலந்து கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீண்ட கால முதலீடுகள் உங்களுக்கு நன்மையை தரும்.
மீனம்
இந்த வருடம் உங்களுக்கு பல வழிகளில் மிகவும் முக்கியமாக இருக்கும். வேலை அல்லது வியாபாரத்தில் நல்ல சூழல் இருந்தாலும், அதை மாற்றவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தீவிரமாக இருக்கும். இருந்தாலும் செப்டெம்பர் மாதம் வரை, புதிதாக ஏதேனும் தொடங்கும் போது அல்லது மாற்றும் போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. யார் மீதும் நீங்கள் நம்பிக்கை வைக்கக்கூடாது. நீங்கள் இரும்பு, சிமெண்ட், கனரக கருவிகள் அல்லது கனரக வாகனங்களில் நீங்கள் வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், இந்த வருடம் நல்ல பலன்களை தரும். உங்களது இலக்குகளை அடைவதில் மும்முரமாக இருப்பீர்கள். சச்சரவுகள் அல்லது கருத்து வேறுபாடுகளுக்கு வாய்ப்புகள் இருப்பதால், உங்களது பேச்சில் தெளிவும் இனிமையும் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உங்களது காதல் வாழ்க்கை சிறப்பாக இருந்தாலும், முதல் இரண்டு மாதங்களுக்கு பிறகு, அது மெதுவாக செல்வது போலத்தோன்றும். பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதிக்கு பிறகு, திருமணம் தொடர்பான முடிவுகளை எடுத்தால் நல்ல பலன்களை தரும். இந்த வருடத்தின் முடிவில் காதலியுடன் உங்களது உறவு வலுவடையும். குடும்பத்தினரின் சந்தோஷத்துக்காக நீங்கள் செலவு செய்வீர்கள். குடுமபத்தினர் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதற்கும் தீர்வு காணப்படும். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை உள்ள காலத்தில் உங்கள் நண்பர்கள் வட்டம் விரிவடையும். மாணவர்கள் இந்த வருடத்தை சிறப்பாக தொடங்கினாலும், பிப்ரவரிக்கு பிறகு, குறிப்பாக கடினமான பாடங்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த வருடத்தில் உங்களது உடல்நிலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்து கானப்படும்
No comments:
Post a Comment