அரையாண்டு தேர்வு விடுமுறையில் திடீர் திருப்பம்..பள்ளி திறக்கும் தேதியில் மீண்டும் மாற்றம் வருமா ? - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 31 December 2019

அரையாண்டு தேர்வு விடுமுறையில் திடீர் திருப்பம்..பள்ளி திறக்கும் தேதியில் மீண்டும் மாற்றம் வருமா ?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் நடக்கும் என்பதால் பள்ளிகள் ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது..

SCHOOL HOLIDAYS

இந்த நிலையில் தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் முக்கிய உத்தர்வு பிறப்பித்தால் வாக்குகள் எண்ணும் பணி ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் விடுமுறை ரத்து செய்யப்பட்டு ஜனவரி 2ஆம் தேதியே பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது..

ஆனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவே வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், வாக்குகள் எண்ணுவதற்கு தடை கேட்கவில்லை என்றும் கூறப்படுவதால் உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து உத்தரவு வந்தபின்னரே எதையும் உறுதியாக கூற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment

Join Our Telegram Group