டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை உள்ளது. குறிப்பாக மாதம் இறுதியில் அடுத்தடுத்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளும் பொது விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் விடுமுறை விடப்படும். அதன்படி, டிசம்பர் மாதத்திற்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அடுத்தடுத்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது.
விடுமுறை நாட்கள் கீழ்கண்டவாறு:
22ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை, 25ஆம் தேதி - கிறிஸ்துமஸ், 26ஆம் தேதி - பாக்ஸிங் டே, 28 ஆம் தேதி - நான்காவது சனிக்கிழமை, 29 ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை.
மாத இறுதியில் ஐந்து நாட்கள் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்களது தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் பணி பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment