ஆரஞ்சு கலர் கேரட்டுக்கு பதிலா இனி கருப்பு கலர் கேரட் சாப்பிடுங்க... ஏன்னு தெரியுமா?... இதுதான் அந்த ரகசியம்... - KALVISEITHI | கல்விச்செய்தி

Saturday 21 December 2019

ஆரஞ்சு கலர் கேரட்டுக்கு பதிலா இனி கருப்பு கலர் கேரட் சாப்பிடுங்க... ஏன்னு தெரியுமா?... இதுதான் அந்த ரகசியம்...

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

கேரட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நமக்குத் தெரியும். அதில் நாம் வழக்கமாகச் சாப்பிடும் ஆரஞ்சு நிற கேரட்டைத் தவிர வேறு என்ன கலரில் கிடைக்கும். குறிப்பாக கருப்பு நிற கேரட்டில் என்னென்ன சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.

​பிளாக் கேரட்

கருப்பு கலர் கேரட்டா என்று ஆச்சர்யப்படாதீர்கள். கருப்பு கலரே தான். டார்க் பர்ப்பிள் கலர் கேரட்டைத் தான் பிளாக் கேரட் என்று சொல்கிறார்கள். நம்மில் நிறைய பேர் இந்த பிளாக் கேரட்டைப் பார்த்திருக்கவே மாட்டார்கள். ஆனால் இது ஒன்றும் அவ்வளவு அபூா்வமான விஷயம் கிடையாது. குறிப்பாக ஆசிய நாடுகளில் மிகவும் பரவலாக பொதுவாகக் கிடைக்கின்ற ஒன்று தான். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் தங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியவற்றில் ஒன்று இந்த பிளாக் கேரட்.

​அது என்ன பிளாக் கேரட்?

அதென்ன பிளாக் கலர் கேரட்? ஏதெனும் மரபு மாற்றம் செய்யப்பட்டு சந்தைகளில் கிடைக்கிறதா என்று நீங்கள் பயப்படத் தேவையில்லை. இயற்கையாகவே கேரட்டுக்கு பல நிறங்கள் உண்டு. அதில் ஒருவகை தான் இந்த பிளாக் கேரட். இந்தியா மற்றும் சீனாவில் சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது தான். இந்த ஆரஞ்சு நிற கேரட் பொதுவாக அமெரிக்காவில் பரவலாகக் கிடைக்கக்கூடிய ஒரு வகை. சிவப்பு, பர்ப்பிள், வெள்ளை, மஞ்சள், கருப்பு நிற கேரட்டுகள் இந்தியா மற்றும் சீனாவில் கிடைக்கின்றன.

​கலருக்கு என்ன அர்த்தம்?

கலரை வைத்து பயந்து விடாதீர்கள். கேரட்டின் நிறத்தை வைத்தே அதில் என்ன ஊட்டச்சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது என்று வித்தியாசப்படுத்தித் தெரிந்து கொள்ள முடியும். கருப்பு மற்றும் பர்ப்பிள் நிற கேரட் என்றால் அதில் ஆந்தோ சியானின் என்றும் பொருள் அதிக அளவில் இருக்கும். இதுவே ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறக் கேரட்டுகள் என்றால், அவற்றில் அதிக அளவில் பீட்டா கரோட்டீன் இருக்கும்.

​சுவை

பிளாக் கலர் கேரட்டின் சுவை மிகவும் அலாதியானது. அதேபோல் மிகவும் வித்தியாசமானது. குறிப்பாக வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறக் கேரட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சுவை கொண்டது. கருப்பு நிற கேரட் மிகவும் இனிப்புச் சுவை கொண்டது. ஆனால் சாப்பிட்டு முடித்ததும் லேசான கார சுவை இருப்பதையும் உங்களால் உணர முடியும். தற்போது எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இந்த பர்ப்பிள் மற்றும் பிளாக் கேரட்டுகள் விற்கப்படுகின்றன. சரி. நாம் வழக்கமாகச் சாப்பிடும் ஆரஞ்சு கேரட்டிலிருந்து வேறுபட்டு இந்த பிளாக் கேரட் என்ன மாதிரியான ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது என்று பார்ப்போம்.

​மூட்டுவலி (ம) முடக்குவாதம்

கருப்பு நிற கேரட்டில் உள்ள சில முக்கியப் பண்புகள், ஆன்டி- இன்பிளமேட்டரி பண்புகள் கொண்டவை. இதில் அதிக அளவில் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருப்பதினால் எலும்பு, மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமைகின்றது. மூட்டு வலியால் உண்டாகும் ஆக்சிடேட்டிவ் ஸ்டிரஸ் என்று சொல்லப்படும் அழுத்தத்தை இந்த பிளாக் கேரட் குறைக்கிறதாம்.

​ஜீரண சக்தி

கேரட்டில் மிக அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. அது நாம் சாப்பிடும் உணவை மிக வேகமாக ஜீரணமடையச் செய்கின்றது. நார்ச்சத்து என்பது, நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை முறைப்படுத்தி உடலுக்கு கொடுக்கும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். இவை அத்தனையையும் பிளாக் கேரட்டில் உள்ள நார்ச்சத்து நம்முடைய உடலில் செய்கின்றது.

​கொலஸ்ட்ரால், நீரிழிவு

உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. லோ கொலஸ்ட்ராலை முறைப்படுத்தி வைக்கும் பண்பு கொண்டது. அதேபோல உடலில் சுரக்கும் இன்சுலின் மற்றும் குளுக்கோஸை முறைப்படுத்தி நீரிழிவு நோய் ஏற்படாமலும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள்ளும் வைத்திருக்கும் பண்பு கொண்டது.

​புற்றுநோய் தடுக்க

புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய ஆற்றல் இந்த பிளாக் ரேட்டில் இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் கேரட்டில் உள்ள உட்பொருள்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வில், பிளாக் கேரட்டில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான மருந்துகளில் பிளாக் காரட்டின் உட்பொருள்கள் பயன்படுத்தப்படலாம் என் பரிந்துரையும் அந்த ஆய்வில் முடிவில் செய்யப்பட்டு இருக்கிறது.

​நரம்புக்கோளாறுகளை சரிசெய்யும்

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் தங்களுடைய உணவில் இந்த கருப்பு நிற கேரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதேபோல கேரட் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்ற பொன்மொழியை ஒரு கட்டத்தில் காமெடியாகவே மாற்றிவிட்டோம். நம்முடைய ஆரோக்கியம் சார்ந்த விஷயம் என்பது காமெடி அல்ல. உண்மையிலேயே கேரட் கண்ணுக்கு அவ்வளவு நல்ல விஷயங்களைக் கொடுக்கின்றன. அதிலும் குறிப்பாக பிளாக் கேரட் கண் பார்வையை தெளிவாகத் தரக்கூடிய ஆற்றல் கொண்டது. பார்வைக் கோளாறுகள் ஏதேனும் இருந்தாலும் சரிசெய்து விடும்

No comments:

Post a Comment

Join Our Telegram Group