தினமும் காலையில் எழுந்ததும் யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி, நடைபயிற்சி அல்லது மெல்லோட்டம் செய்வது நல்லது. இத்துடன் உணவு உட்கொள்ளும் முறைகளிலும் சிறு மாற்றங்கள் கொண்டுவந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு பரபரப்பான நாளில் பெரும்பாலானவர்கள் தங்கள் உணவில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்கு ஓடுவதுதான் அனைவரது தினசரி வாழ்க்கையாக உள்ளது. இது தவறு. ஒரு நாள் முழுவதும் உங்கள் உடலில் ஆற்றல், புத்துணர்ச்சி நீடித்து இருக்க ஆரோக்கியமான உணவுப் பழக்கம் அவசியம். ஆரோக்கியமான உணவுகளுக்கு நாம் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. நாம் தினமும் உட்கொள்ளும் உணவையே வேளைகேற்ப ஒழுங்கு படுத்தினாலே போதுமானது.
நாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்
காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், குடலியக்கம் சீராக இயங்குவதோடு, உடலும் ஒல்லியாகும்.
நாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்
கிரீன் டீயில் காபியை விட, குறைவான அளவில் காப்ஃபைன் இருப்பதோடு, அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. எனவே இது உடலை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும். எனவே காபி, டீ குடிப்பதற்கு பதிலாக கிரீன் டீ அருந்தலாம்.
நாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்
தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.
நாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்
பாலில் நிறைய புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், காலை 11 மணியளவில் ஒரு டம்ளர் பால் அல்லது மில்க் ஷேக் அருந்துவது.
நாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்
கோடைகாலங்களில் காலையில் எழுந்ததும் தாகமாக இருக்கும். எனவே அப்போது நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணியை ஜூஸ் போட்டு சாப்பிட்டல், உடல் வறட்சி நீங்கி புத்துணர்வுடன் இருப்பதோடு, கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
நாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்
மதிய உணவுடன் ஏதாவதொரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இதில் உள்ள வைட்டமின் பி காம்பிளக்ஸ் உடல்தசைகளுக்கு ஊட்டம் அளிக்கும்.
நாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்
முளைகட்டிய பயிர் அல்லது முழுதானியத்தில் சுண்டல் செய்து மாலை சாப்பிடலாம். இது உடலுக்கு ஊட்டச்சத்து அளிப்பது மட்டுமல்லாமல் அரோக்கியமான மாலை நொறுக்கித் தீ னியாகவும் உள்ளது.
நாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்
சப்பாத்தி, கோதுமை உப்புமா, கோதுமை தோசை ஆகியவற்றை இரவு உணவாக சாப்பிடுவது உடலுக்கு நார்ச்சைத்தை அளிக்கும். இரவு கீரை, தயிர், மாமிசம் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment