உங்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் வெண்டைக்காய் - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 25 December 2019

உங்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் வெண்டைக்காய்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும். இதில் உள்ள பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது. தவிர இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.

நியாபக மறதி...நம்மில் பலரை அன்றாடம் வாட்டும் மறதியானது நம் அன்றாட வாழ்க்கையில் பல விதத்தில் தொல்லை கொடுக்கும். அலுவக மேசை டிராயர் சாவியைத் தொலைப்பதில் இருந்து வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட்டை மறப்பது, வீட்டை பூட்ட, கியாஸ் ஆஃப் செய்ய மறப்பது என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆரோக்கியாமன் காய்கறிகள் சாப்பிடுவதன்மூலம் இதனை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.வெண்டைக்காய் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெண்டைக்காயில் ஆரோக்கிய பலன்கள் என்ன, அதனை எவ்வாறு சமைத்து உண்ண வேண்டும் எனப் பார்ப்போமா?

நினைவாற்றலை மேம்படுத்தும் வெண்டைக்காய்

மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும். இதில் உள்ள பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது. தவிர இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.

நினைவாற்றலை மேம்படுத்தும் வெண்டைக்காய்

வெண்டையின் விசேஷ குணம் அதன் கொழகொழப்பு. இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.
இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.
வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது.
வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.
வெண்டைக்காய் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. வளரும் சிறார்களுக்கு வெண்டைக்காய் மிக அவசியம்.

எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் நினைவாற்றலை அதிகரிக்க மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சில மாத்திரைகளை சாப்பிடுவது தவறு. இயற்கையான உணவான வெண்டைக்காய் மூலம் நினைவுத் திறனை மேம்படுத்தலாம்

No comments:

Post a Comment

Join Our Telegram Group