உங்க உடம்புக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணி குடிக்கணும்? எப்படியெல்லாம் குடிக்கலாம்?... - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday 20 December 2019

உங்க உடம்புக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணி குடிக்கணும்? எப்படியெல்லாம் குடிக்கலாம்?...

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

தண்ணீர் நிறைய குடிப்பது உடலுக்கு நல்லது என்று தெரியும். ஆனால் போதிய நேரமில்லை, தாகம் எடுக்கவில்லை என ஏதாவது சாக்கு போக்கு சொல்கிறோம். நம் உடலில் ஏற்படும் நிறைய பிரச்சினைகளுக்கு போதிய அளவு நீர்ச்சத்து இல்லாமை தான் காரணம் என்பது தெரியுமா உங்களுக்கு. சரி. உங்களுடைய உடலுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அந்த தேவையை எப்படியெல்லாம் நிறைவு செய்து கொள்ளலாம் என்று இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

​தண்ணீர் குடிப்பது

நமது உடலில் 70% தண்ணீரே உள்ளது தேவையான அளவு தண்ணீர் அருந்துவது உடல் நலத்திற்குப் பாதுகாப்பை அளிக்கும். தண்ணீர் நமது உடம்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதில் உள்ள எலக்ட்ரோலைட்டை சீராக வைத்துள்ள உதவுகிறது. அதுபோல் ரத்த ஓட்டத்தைச் சீர் செய்கிறது. வெப்ப அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் கால் மூட்டு கை மூட்டு போன்ற வகைகள் சிறப்பாக இயங்கவும் உதவி செய்கிறது. மேலும் உடலில் உள்ள செல்களுக்கு நன்மை செய்கிறது.

எனவே அனைவரும் தண்ணீர் போதுமான அளவு குடித்து வருவது அவசியம். இங்கே தண்ணீர் பெரும்பாலானோர் சரியாக அருந்துவதில்லை அதற்கு 12 எளிய வழிமுறைகளைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.


​உங்கள் உடலின் தண்ணீர் தேவை

அதிகமாகத் தண்ணீர் அருந்துவதற்கு முன் உங்கள் உடலில் தண்ணீர் தேவையை நீங்கள் முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும்.

தினமும் கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் என்று கூறுகின்றனர். அல்லது 8 கப் தண்ணீர் குடிப்பது அவசியம் என்று கூறுகின்றனர்.

நேஷனல் அகாடமி ஆஃப் மெடிசின் எனப்படும் நிறுவனமானது தினமும் 3700 மில்லி அதாவது கிட்டத்தட்ட மூன்று அரை லிட்டர் மற்றும் 200ml தண்ணீர் அருந்துவது அவசியம் என்று கூறுகின்றனர், இது ஆண்களுக்கு. பெண்கள் தினமும் குறைந்தபட்சம் 2,700 மில்லி தண்ணீர் அருந்த வேண்டும் என்று கூறுகின்றனர். இது தண்ணீர் மட்டுமல்லாமல் தண்ணீர் சார்ந்த உணவுப் பொருட்களாகும், தண்ணீர் ஆகவும் இருக்கலாம் அல்லது ஜூஸ் போன்றவையாகும் இருக்கலாம்.

இந்த நிறுவனமானது இது அவரவர் உடல் நிலையைப் பொறுத்து மாறுபடும் என்று கூறுகின்றனர். சிலர் அதிகமாகத் தண்ணீர் குடிக்க முடியாத உடல் சூழலில் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இது பரிந்துரைக்கப்பட்ட அளவு ஆகும்.

சிலர் தாகம் எடுக்கும் பொழுதும் சாப்பிட்ட பின்பும் தண்ணீர் குடிப்பதே தன் உடலுக்கு போதுமானது என்று கருதுகின்றனர். அது அப்படி இல்லை குறிப்பிட்ட அளவு நிச்சயமாக எடுத்து வந்தாலே தண்ணீர் குறைபாடு சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும்.


​வரையறை முக்கியம்

தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் அருந்துவதைப் போன்று தினமும் குறிப்பிட்ட லிட்டர் அதாவது, ஆண்கள் ஒரு இரண்டரை லிட்டர். பெண்கள் ஒரு இரண்டு லிட்டர் நிச்சயமாகத் தண்ணீர் உட்கொள்ள வேண்டும் என்று நமக்கு நாமே ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். ஒரு இரண்டு லிட்டர் பாட்டிலில் இரண்டு பாட்டில் எடுத்து வைத்துத் தெளிவாக அது காலியாக வரை இடைவெளி விட்டுக் குடித்து வருவது நல்லது.சிலர் கொஞ்சம் கொஞ்சமாக 32 தடவை தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளார்கள்.சிலர் ஒரு 2 லிட்டர் பாட்டிலையும் ஒரு லிட்டர் பாட்டிலையும் தினமும் காலி செய்ய வேண்டும் என்று என்று ஒரு திட்டத்தை வகுத்து வைப்பார்கள்.


தண்ணீர் பாட்டில்

நம்முடன் எப்பொழுதுமே தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டிலே வைத்திருக்க வேண்டும். நம் விருப்பப்படி ஒரு நல்ல தண்ணீர் பாட்டிலை வாங்கி வைத்து நமது அருகிலேயே வைத்திருப்பது மிகவும் நல்லது. நாம் தினமும் அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறதுக்கு ஊக்கமாக அமையும்.

வீட்டிலேயோ அல்லது அலுவலகத்திலோ அல்லது பள்ளி மற்றும் கல்லூரியில், எங்கு இருந்தாலும் நமது தண்ணீர் பாட்டில் நமது அருகே எப்பொழுதும் இருப்பது மிகவும் நல்லது.

மேலும் தண்ணீர் பாட்டில் நமது அருகிலேயே இருப்பதினால் ஞாபக மறதியால் தண்ணீர் குடிக்காமல் இருப்பதை தவிர்க்கலாம்.பாட்டில் அருகிலேயே இருப்பதால் அடிக்கடி தண்ணீர் அருந்துவதை வழக்கமாக வைப்போம். எனவே எப்பொழுதும் நமது அருகில் ஒரு தண்ணீர் பாட்டில் இருப்பது நல்லது


​ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்

பெரும்பாலானோர் தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் ஆனால் ஞாபக மறதி காரணமாக அது நடக்காமல் போய்விடும்.எனவே சரியான நேரங்களுக்குத் தண்ணீர் குடிக்க ஞாபகப்படுத்துவது போன்று ஸ்மார்ட்போன்களில் ஆப் உள்ளது அதைப் பயன்படுத்துவது மறதியிலிருந்து நம்மைக் காக்கும்.

அதுபோன்ற ஆப் தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று செட் செய்து வைத்துக்கொள்ளலாம். அதுபோல் எத்தனை மணிக்கு ஒரு தடவை அலாரம் அடிக்க வேண்டும் என்றும் செட் செய்து வைத்துக் கொள்ளலாம் குறிப்பாக அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் அது போல் செட் செய்து கொள்ளலாம். இதுபோன்ற ஸ்மார்ட்போன் ஆப்கள் நமது மும்மரமான காலகட்டத்தில் தண்ணீர் குடிக்க பெரிதும் உதவுகின்றது. ஞாபகமறதி அதிகமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


​தண்ணீருக்குப் பதிலாக

சிலர் தினமும் தண்ணீரை அதிக நேரம் குடிப்பது போர் அடித்து விடுகிறது என்றும் கூறுகின்றார். அதனால் தண்ணீர் பலர் அதிக நேரம் குடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். இதற்குப் பதிலாகத் தண்ணீர் மட்டுமே குடிப்பதற்குப் பதில் ஜூஸ் போன்ற மற்ற விஷயங்களைப் பலர் குடித்து வருகின்றனர். ஆனால் இது போன்ற விஷயங்களில் சர்க்கரை அதிகமாக இருக்கும் எனவே அதே நம் உணவில் கலோரியை அதிகரிக்கும் தினமும் ஒரு மனிதன் சராசரியாக ஒரு இரண்டாயிரம் கலோரி அளவு உள்ள உணவை உண்ண வேண்டும்.

அதற்கு மேல் உண்ணும் உணவே நம் எடை அதிகரிக்கக் காரணமாக அமைகிறது. தண்ணீருக்குப் பதில் ஜூஸ் போன்றவற்றை நாம் அருந்துவதால் அதில் அதிக கலோரி உள்ளது. அது நம் எடையை அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.மேலும் சர்க்கரை உடலுக்குப் பெரிய அளவிலான நன்மையைத் தருவது இல்லை. மாறாக சில தீங்குகளை விளைவிக்கிறது. ஒருநாள் சாப்பாட்டில் ஐந்து சதவீதம் மட்டுமே சர்க்கரை இருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். எனவே தண்ணீருக்கு பதில் மற்ற சர்க்கரை கலந்த ஜூஸ்களை குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது சர்க்கரை கலக்காத பழச்சாறுகளைக் குடிப்பது மிகவும் நல்லது.


​சாப்பிடும் முன் ஒரு கப்

சாப்பிடுவதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கப் தண்ணீரை நாம் அருந்த வேண்டும். அப்படி அருந்தினால் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பாடு சாப்பிடுவோம் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு நாளைக்கு 3 கப் அதாவது 720 மில்லி அதிகமாக தண்ணீர் அருந்தி இருப்போம். இப்படியும் நாம் தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்கலாம். இதில் இன்னொரு நல்ல விஷயமும் உள்ளது.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கப் தண்ணீர் குடிப்பதால் நம் பசி சற்று குறைந்து காணப்படும். எனவே அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும்.கலோரி அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள் இது போன்ற விஷயங்களைச் செய்வதினால் அதிகமாக கலோரி உட்கொள்வதைச் சிறிது குறைக்கலாம். மேலும் தண்ணீரின் அளவும் உடலில் அதிகரிக்கும்.


​வாட்டர் பில்டர்

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் டேப்பில் வரும் தண்ணீரே மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. டேப்பில் வரும் தண்ணீரை அவர்கள் சுத்தப்படுத்தியே வரும். ஆனால் மற்ற நாடுகளில் அது போன்று இருப்பது சந்தேகமே. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில் சுத்தம் செய்து தண்ணீரைச் செலுத்துவது கடினமாகக் காரியம். எனவே அதிகம் தண்ணீர் குடிப்பதற்கு முன்னர், தண்ணீரின் சுத்தத்தை நாம் கண்டறிய வேண்டும்.

அல்லது வாட்டர் பியூரி ஃபையர் எனப்படும் தண்ணீர் கிருமி நீக்கும் கருவி அனைத்து விலைகளிலும், அனைவரும் வாங்குவதற்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற வாட்டர் பியூரி ஃபையர் பயன்படுத்தி தண்ணீரைச் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஏனென்றால் பெரும்பாலான வியாதிகள் தண்ணீர் மூலமாகவே பரவுகின்றன. அதிகம் தண்ணீர் குடிப்பதற்கு முன் தண்ணீரின் சுத்தத்தைப் புரிந்து கொள்வது அவசியம்.


​நறுமண தண்ணீர்

சிலருக்குத் தண்ணீரின் சுவை அழுத்து விடுவதால் அதிகம் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து வருகின்றார்கள். இதுபோன்று எண்ணுபவர்கள் தண்ணீரின் நறுமணத்தை அல்லது சுவையைச் சிறிது மாற்றக்கூடிய ஃப்ளேவர் சேர்த்துக் கொள்ளலாம்.

கடைகளில் எலுமிச்சை பழம், ஸ்ட்ராபெரி, வெள்ளரிக்காய் போன்ற பழங்களின் ருசி கொண்ட ப்ளே வர்கள், பாக்கெட்டில் கிடைக்கின்றது. இவற்றைத் தண்ணீரில் கலந்து கொள்ளலாம் சிறிது ருசி கிடைக்கும். ஆனால் இவற்றில் செயற்கைத் தன்மை அதிகம் காணப்படுகிறது. இதில் சர்க்கரையின் கலவையும் சற்று இருக்கும் இது உடலுக்கு சில சமயம் தீங்கு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும் எனவே இதைத் தவிர்ப்பது நல்லது.


​வேலைக்கு நடுவே

நாம் தினமும் 8 மணி நேரம் வேலை பார்க்கிறோம் என்று வைத்துக்கொண்டால், வேலையின் நடுவே ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் தண்ணீர் அருந்துவதைப் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

8 மணி நேர வேலை என்றால் 8 கப் தண்ணீர் அறிந்திருப்போம். 8 கப் என்பது கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் தண்ணீர் ஆகும்.மீதி உள்ள தண்ணீரைச் சாப்பிடுவதற்கு முன் சாப்பிடுவதற்குப் பின் நாம் பருகி இருப்போம். இப்படி கணக்கு செய்து பார்க்கும்போது நாம் அருந்த வேண்டிய 3 லிட்டர் தண்ணீர் ஆனது பருகியிருப்போம்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group