சர்க்கரை, புற்றுநோய், இதயம் எல்லாமே கட்டுக்குள் வர இதை எடுத்துகொள்ளுங்கள் - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 17 December 2019

சர்க்கரை, புற்றுநோய், இதயம் எல்லாமே கட்டுக்குள் வர இதை எடுத்துகொள்ளுங்கள்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

நாம் பாரம்பரியமாக சமையலறையில் பயன்படுத்தப்பட்ட உணவு பொருள்களின் மருத்துவ குணத்தை உலகம் முழுக்க ஆய்வுகளும் உட்படுத்தி அதன் நன்மைகளையும் தெரிவித்திருக்கின்றன. அதில் ஒன்று கருஞ்சீரகம்.கருஞ்சீரகம் குறித்தும், கருஞ்சீரகத்தின் பயன்களைக் குறித்தும் பார்க்கலாமா?

​கருஞ்சீரகம்

வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியாக இருந்தால் உடலில் நோய்களே வராது என்றார்கள் சித்தர் கள். அப்படி உடலில் அதிகமாகும் கபத்தை குறைக்க கருஞ்சீரகம் பயன்படுகிறது.

பாட்டிமார்கள் உணவில் மசாலக்கள் சேர்க்கும் போதும் காய்ச்சலுக்காக கருஞ்சீரகத்தைப் பயன் படுத்தி வந்தார்கள். மணமும் சுவையும் தனித்துவமாக கொண்டிருக்கிறது. முக்கியமாக மூலிகை கள் சேர்ந்த கஷாயத்தில் கருஞ்சீரகமும் கண்டிப்பாக இடம்பெறும்.

இதை நம் முன்னோர்கள் மட்டுமல்ல உலகமெங்கும் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தினார் கள். ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தமருத்துவத்தில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது என் பது குறிப்பிடத்தக்கது.

​என்ன இருக்கு

தாவரங்களிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்டிருக்கும் உணவு பொருள் என்றால் அது கருஞ்சீரகம் தான். கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்னும் வேதிப்பொருள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடெண்ட் ஆக செயல்படும் கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள்,கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், கச்சா நார், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந் திருக்கின்றன.

​நீரிழிவுக்கு கருஞ்சீரகம்

நீரிழிவு நோய் வராமல் தடுப்பதில் கருஞ்சீரகத்தின் பங்கு அளப்பரியது. வளரும் பருவத்திலிருந்து குழந்தைகளுக்கு உணவு வழியாக இதைக் கொடுத்துவந்தால் அவர்கள் நீரிழிவு நோயை எதிர் கொள்ள மாட்டார்கள். நீரிழிவு வந்தவர்கள் அவ்வபோது கருஞ்சீரக நீரை எடுத்துவந்தால் இரத்தத் தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதை தடுக்கும்.

அது அட்டுமல்லாமல் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயால் உடலில் உண்டாகும் இன்ன பிற குறைப்பாட்டையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க செய்கிறது. தினமும் வெறும் வயிற்றில் கருஞ் சீரகம் கொதிக்க வைத்த நீரை குடித்துவந்தால் நீரிழிவு கட்டுப்படும். ஆனால் கட்டுப்படுத்தப் படாத நீரிழிவு இருக்கும் போது கருஞ்சீரகத்தால் மட்டுமே குறைக்க முடியாது. மருத்துவரின் ஆலோசனை யோடு மாத்திரைகளும் எடுத்துகொள்ள வேண்டும்.

​புற்றுநோயைத் தடுக்கிறது

கருஞ்சீரகத்தை ஆய்வு செய்த போது அதில் இருக்கும் தைமோகுவினோன் புற்றுநோயை உண்டாக் கும் செல்களை தடுப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரத்த புற்றுநோய், மார்பக புற்றுநோய், கணை யம், கல்லீரல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கி றது.

உடலில் எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்குவதில் உதவி புரிகிறது. புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்து போராட கருஞ்சீரகம் உதவிபுரிகிறது.

​வயிற்றை பாதுகாக்கும்

வயிற்றில் புண் என்பது வாய்ப்புண்ணில் தெரியும் என்பார்கள். அந்த வயிற்றில் இருக்கும் குறை பாட்டை போக்கவும் உதவுகிறது கருஞ்சீரகம். ஆய்வு ஒன்றில் கருஞ்சீரகம் வயிற்றில் சுரக்கும் அதி கப்படியான அமிலத்தைக் கட்டுப்படுத்தி வயிற்றுப்புண் வராமல் தடுக்கிறது என்பதை கண்டறிந் தார்கள்.

வயிற்றுப்புண் கொண்ட எலிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் 80 சதவீதம் வரை அதன் பாதிப்பு கள் குறைந்தது கண்டறியப்பட்டது. மனிதர்களை உட்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

​பெண்களுக்கு கருஞ்சீரகம்

மாதவிடாய் காலத்தில் அடிவயிறு வலிக்கும் போது சிறுநீரக பிரச்சனையும் சேர்ந்து சில பெண்க ளை அவதிப்படுத்தும் அவர்கள் மாதவிடாய் காலத்திற்கு 5 நாட்கள் முன்னதாக வெறும் வயிற்றில் நீரில் கலந்து சாப்பிட்டால் அடி வயிறு வலி குறையும். இது சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை வெளி யேற்ற உதவும்.

பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு கொடுக்கும் பிரசவ லேகியத்தில் கருஞ்சீரகமும் சேர்த்து கொடுப்பது வழக்கம். இது கருப்பையில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற உதவும்.

கருஞ்சீரகத்தின் பயன்களை இன்னும் இன்னும் பட்டியலிட்டு கொண்டே போகலாம். கருஞ்சீரகம் இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைத் தடுப்பதோடு செரிமானக்கோளாறுகள் நீக்கி பசியைத் தூண்டும், வயிற்றுப்போக்கை குணப்படுத்தி வயிற்றில் இருக்கும் பூச்சை வெளியேற்றும். சருமத்தி லும் இதை அரைத்து பேக் போட்டு உபயோகிக்கலாம். சருமத்தில் உண்டாகும் தேமல், சொரி, முகப் பரு குறையும்.

இனி கருஞ்சீரகத்தையும் மறக்காமல் வாங்குங்கள். நோயில்லையென்றால் என்ன நோயைத் தடு க்க வருமுன் காக்க இதை செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group