சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இவையெல்லாம் இருந்தால் ஆஸ்துமாவா? - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 23 December 2019

சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இவையெல்லாம் இருந்தால் ஆஸ்துமாவா?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

ஆஸ்துமா இந்த நோயைக் கட்டுக்குள் வைத்தால் எந்தவிதமான பிரச்சனையும் வராது. ஆனால் ஆஸ்துமா என்றால் என்ன என்றே தெரியாமல் அடிக்கடி சளி தொந்தரவு, தொடர்ந்துவரும் இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பாதிப்புகள் இருந்தாலே அவை ஆஸ்துமாதான் என்று நினைத்துக்கொள்ளும் பலரும் ஆஸ்துமாவை பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

ஆஸ்துமா

சுவாசத்தில் கோளாறை உண்டாக்கும் ஆஸ்துமா பரம்பரை சம்பந்தமாக இந்த பாதிப்பு அதிகம் வரு கிறது. இது நுரையீரலின் செயல்பாட்டை பாதிக்கும் நோய் என்றும் சொல்லலாம். மூச்சுக்குழல் மற் றும் நுரையீரலில் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. நமது உடலில் எண்ணிலடங்காமல் இருக்கும் செல்களுக்கு வேண்டிய ஆக்ஸிஜனை எடுத்துசெல்ல நுரையீரல் உதவுகிறது. அதே போன்று உடல் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.

மரபு மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழல் மாசுபாடு, அலர்ஜி, தூசு, ஒவ்வாமை போன்றவை அதிகரி கும் போது இந்த பிரச்சனை உண்டாகிறது. ஆனால் பெரும்பாலோனோர் மூச்சு விட முடியவில்லை என்றதுமே அதை ஆஸ்துமா என்று சுயமாக முடிவெடுத்துவிடுகிறார்கள்.

சளி, இருமல், விசில் சத்தம் போன்ற மூச்சு இவையெல்லாம் தொடர்ந்து இருந்தாலோ அடிக்கடி வந் தாலோ முறையாக மருத்துவரை அணுகி குறைபாடை தெரிந்துகொள்வது நல்லது.

​ஆஸ்துமா என்ன செய்யும்

ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்திவிடலாம். ஆனால் இவை அதிகரிக் கும் போது அவற்றை தொடர்ந்து கட்டுப்பாட்டிலேயே வைக்க வேண்டும். இது மூச்சுக்குழாயில் சுருக்கத்தை உண்டாக்கி வீக்கத்தைக் கொடுத்து சளியை நிறுத்தும், இதனால் மூச்சுவிடுவதில் சிரமமும், மூச்சுத்திணறலும் அதிகரிக்கும் . அப்போது மூச்சுவிடும்போது ஒருவித சத்தத்தை உண்டாக்கும்.

ஆஸ்துமாவை உணர்ந்து மாத்திரைகளை எடுத்துகொள்பவர்கள் மழைகாலங்களிலும் குளிர்காலங் களிலும் மூச்சுத்திணறல் பிரச்சனைகளை சந்திக்க மாட்டார்கள். ஆஸ்துமா பாதிப்பில் இது முதல் வகையானவை.

பருவ மாற்றங்கள் வரும்போதெல்லாம் இந்த தொற்று பாதிப்புகள் உண்டாகி உடல் நல குறைபாட் டை ஏற்படுத்தி மோசமான நிலையை உண்டாக்கும். சிலருக்கு இரவு நேரத்தில் அதிகமாகவே இந்த பிரச்சனை வெளிப்படும்.

​ஆஸ்துமாவும் காரணமும்

குறிப்பிட்டு இரண்டை சொல்லலாம் ஒன்று உடல் சார்ந்த பிரச்சனைகளால் ஏற்படும். மற்றொன்று வெளிப்புற சூழலால் உண்டாகக்கூடியது. இது சுற்றிலும் இருக்கும் உணவு, வீட்டில் இருக்கும் பொருள், பூச்சி மருந்து பயன்படுத்தும் போது உண்டாகும் நெடி, போர்வை தலையணி உறைகள் போன்றவற்றில்கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் உண்ணிகள் போன்றவற்றால் இவை வருகிறது. அன்றாடம் வீட்டில் இந்த பொருள்கள் சூழ வளைய வருகிறோம். இது அலர்ஜியால் உருவாகும் ஆஸ்துமா எனப்படும்.

முதல்வகை உடல் சார்ந்த பிரச்சனைகளை கொண்ட ஆஸ்துமாவானது மரபுரீதியாக வருவது. சிறுவயதிலேயே இந்த பாதிப்பு வருவதற்கு வாய்ப்புண்டு.

​பரிசோதனை முறை

இந்த வயதில் தான் வரும் என்றில்லை. எந்த வயதிலும் இந்த பாதிப்பு வரலாம். மூச்சு விடுவதில் சிர மம் இருப்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் வீட்டில் பரிசோதனை செய்யலாம்.

மருத்து கடைகளில் பீக்ப்ளோ மீட்டர் என்னும் கருவி கிடைக்கும். இதில் சிவப்பு ,மஞ்சள்,பச்சை, நிறத்தோடு 0 முதல் 100 வரை நம்பர் இருக்கும்.மூச்சுவிடுவதில் சிரமம் என்று நினைப்பவர்கள் இந்த கருவியை உபயோகப்படுத்தும் போது 80 லிருந்து 100 வரை இருந்தால் ஆஸ்துமா இல்லை. 50 லிருந்து 80 வரை இருந்தால் ஆஸ்துமா கட்டுப்பாட்டில் உண்டு. அல்லது ஆஸ்துமாவை நெருங் கியிருக்கிறோம் என்று அறிந்துகொள்ளலாம். 0 முதல் 20 வரை இருந்தால் அவர்கள் ஆஸ்துமாவின் பாதிப்பில் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.

இந்தகருவியை வாயின் அருகில் வைத்து முழு பலத்தையும் செலுத்தி ஊத வேண்டும். அப்போது அந்த நம்பர்களின் எண்ணிக்கையை வைத்து ஆஸ்துமாவின் நிலையை அறிந்துகொள்ளலாம்.

​ஆஸ்துமாவை கட்டுப்படுத்த

ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களுக்கு கிருமித்தொற்றும் எளிதாக பரவிவிடும் என்பதால் அறிகுறிக ள் தீவிரமாக இருக்கும் போதே மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லையென்றால் மூச்சுவிடுவ தில் சிரமம் இருக்கும்.

ஆஸ்துமா பாதிப்புக்கு உள்ளானால் இன்ஹேலர் வகையான மருந்தை எடுத்துகொள்ளவே மருத்து வர் அறிவுறுத்துவார். அதை சரியான நேரத்தில் சரியான அளவு எடுத்துகொள்ள வேண்டும்.

சுற்றுசூழல் பரமாரிப்பிலும் வீட்டில் ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள்களையும் இயல்பாகவே கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா என்பது உறுதியானாலோ ஆஸ்துமாவின் ஆரம்ப நிலையில் இருந்தாலோ இன்னும் இன்னும் கூடுதல் கவனம் தேவை.

No comments:

Post a Comment

Join Our Telegram Group