இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை அவ்வபோது பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்று அவசரத்துக்கு முக்கியமாக வயதானவர்களுக்காக சர்க்கரை யின் அளவை கண்டறிய குளுக்கோமீட்டர் வைத்திருப்பார்கள்.ஆனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு என்று அவை காட்டுபவை சரியானதா? அந்த அளவை வைத்து நீங்கள் முடிவை கண்டறிவது சரியானதா? எங்கு தவறு செய்கிறீர்கள்? பார்க்கலாமா?
சர்க்கரை பரிசோதனை
வீட்டில் தலைவலி, காய்ச்சல் என்று அவதிப்படுபவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவராவது இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த நோயை எப்போதும் கட்டுக்குள் வைப்பதும் அதை அவ்வபோது கவனிப்பதும் தான். இல்லை யென்றால் நோயின் தீவிரம் அதிகரித்தாலும் குறைந்தாலும் ஆபத்தை உண்டாக்கிவிடும்.
ஒவ்வொரு முறையும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை தெரிந்துகொள்ள மருத்துவ பரிசோத னைக் கூடத்துக்கு செல்ல வெண்டியதாக இருக்கிறது. அடிக்கடி பரிசோதிக்க வேண்டும் என்பதால் இந்த நோய்க்கான மருந்து வாங்கும் போதே உடலில் சர்க்கரையின் அளவை உடனடியாக தெரிந்து கொள்ள உதவும் குளுக்கோமீட்டர் கருவியையும் வைத்திருக்கிறார்கள்.
குளூக்கோமீட்டர்
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பரிசோதனை மட்டுமே போதும் என்றும் சொல் ல முடியாது. ஆனால் உணவு பழக்கம், உடற்பயிற்சி, மாத்திரைகள் எடுத்துகொள்ளும் போது இரத்த த்தில் சர்க்கரை அளவு தெரிந்துகொள்ள இது உதவுகிறது. அதனால் இது அவசரகாலத்துக்கு பயன் படும் என்பதையும் ஒப்புகொள்ள வேண்டும். ஆனால் சிலர் குளுக்கோமீட்டரில் சரியான அளவை காண்பிக்காது என்பார்கள்.
உண்மையில் குளுக்கோமீட்டரில் பரிசோதனை செய்யும் போது கொடுத்திருக்கும் குறிப்புகளை முறையாக செய்தால் அளவுகளில் மாற்றம் இருக்காது. ஆனால் இதில் செய்யும் சிறு தவறும் இரத் தத்தில் சர்க்கரையின் அளவை மாற்றி காட்டிவிட வாய்ப்புண்டு. அப்படி நீங்கள் செய்யும் தவறுகள் என்ன என்பதை பார்க்கலாமா?
பரிசோதனை செய்யும் பொது
குளுக்கோமீட்டரை பயன்படுத்தும் முன்பு அதன் அளவீடுகளை பார்ப்பதற்கு முன்பு கைகளை கழு விய உடன் பார்க்கவேண்டாம். அதே நேரம் கைகளில் அழுக்குகள் படிந்திருக்கும் என்பதால் பரிசோ தனை செய்ய வேண்டும் என்னும் போது கைகளை சுத்தமாக கழுவி நன்றாக உலர்ந்த பிறகு பரிசோ தனை செய்ய வேண்டும். கைகள் சுத்தமில்லாமல் இருக்கும் போது பரிசோதனை செய்தால் அவற் றின் அளவில் மாறுபாடு இருக்கும்.
2011 ஆ ஆண்டு நீரிழிவு பராமரிப்பு இதழ் ஒன்றில் சர்க்கரை நோய் பரிசோதனை ஆய்வு குறித்து வெளியிட்டது. அப்போது குளுக்கோமீட்டரில் இரத்த துளியை செலுத்தி மாதிரியைப் பார்க்கும் போது முதல் துளி மற்றும் இரண்டாவது துளியில் இருந்த சர்க்கரை அளவு 10 சதவீதம் அதிகமாக வேறுபட்டிருந்தது.அப்போது பரிசோதனைக்குரிய நபர் பழத்தை சாப்பிட்ட பிறகு கைகழுவாமல் இருந்ததும், பிறகு கைகளை கழுவி உலர வைத்த பிறகும் இருந்ததே இந்த வேறுபாடு என்றும் முடிவு செய்தது.
உங்கள் கைகளை கழுவாமல் குளுக்கோமீட்டரில் பரிசோதனை செய்யும் போது முதல் துளி இரத்த த்தில் சர்க்கரை அளவை பார்க்காமல் இரண்டாவது துளி இரத்தத்தைப் பரிசோதனைக்கு உட்படுத் தும் போது அளவில் மாறுபடாது.
எப்போது பரிசோதனை செய்ய வேண்டும்
குளுக்கோமீட்டரை பயன்படுத்துபவர்கள் உணவு உண்டதும் பரிசோதனை செய்ய விரும்புகிறார் கள் 30 நிமிடங்கள் இடைவெளியில் அல்லது 1 மணி நேரத்திற்குள் பரிசோதிக்கும் போது பரிசோத னையின் முடிவு அதிகமாக காட்டும். அதனால் உணவுக்கு பிறகு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதிக்க விரும்பினால் இரண்டு மணி நேரம் கழித்து தான் பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் உணவுக்கு முன்பு பரிசோதனை செய்யலாம். இதனால் இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாக காண்பிக்காது.
டெஸ்ட் ட்ரிப்ஸ்
குளுக்கோமீட்டரில் இருக்கும் டெஸ்ட் ட்ரிப்ஸ் வகைகளை ஒரு முறை பயன்படுத்திய பிறகு மீண்டும் பயன்படுத்தக்கூடாது. ஒரு முறை பயன்படுத்திய டெஸ்ட் ட்ரிப்ஸ் மீண்டும் பயன்படுத்தினால் அவை காட்டும் அளவு சரியாக இருக்காது.மேலும்மாதிரிக்கு ரத்த பரிசோதனை செய்யும் போது கைகளை அறியாமல் குத்திகொண்டால் அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்.
அளவு சரியாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் புதிய டெஸ்ட் ட்ரிப்ஸ் வகைகளை பயன்படுத்த வேண்டும். அவற்றை உரிய முறையில் பாதுகாப்பாகவும் வைக்க வேண்டும்.மேலும் காலாவதியான டெஸ்ட் ட்ரிப்ஸ் பயன்படுத்தும் போது அவை அசாதாரணமான அளவை காட்டிவிடும்.
விரல் நுனியை பயன்படுத்துங்கள்
பரிசோதனை செய்வதற்கு முன்பு விரல்களுக்கும் கைகளுக்கும் மசாஜ் செய்யுங்கள். அப்படி அழுத்தும் போது இரத்த ஓட்டமானது சீராக பரவும்.. அப்போது விரலின் நுனியில் போதுமான இரத்தத்தைப் பெற்றுவிடலாம். இப்படி செய்வதால் விரலை குத்தி அழுத்தி இரத்தம் பெறுவது தடுக்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு ஆய்வின் படி கைகளை மெதுவாக சூடேற்றி இரண்டு கைகளைஉரசி தேய்த்து பிறகு எடுக்கலாம். இப்படி செய்யும் போதும் இரத்த மாதிரியை பெறமுடியும். எந்த விரலையும் பயன்படுத்தலாம். ஒரே விரலை தொடர்ந்து பயன்படுத்தகூடாது. இது வலியை உண்டாக்கும். அதே போன்று நரம்புகள் அமைந்துள்ள இடத்தில் அல்லாமல் விரல் நுனியில் பரிசோதிக்க வேண்டும்.
கவனம் செலுத்த வேண்டியது
உடலுக்கு போதிய நீர்ச்சத்து தேவை. உடலில் நீர்ச்சத்து குறையும் போது அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடுகிறது. மேலும் அதிகப்படியான சிறுநீரை கழிக்கு போதும் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இந்த நிலை வராமல் இருக்க போதுமான அளவு திரவ ஆகாரங் களைக் குடிக்க வேண்டும்.
குளுக்கோமீட்டர் பயன்படுத்தும் போதும் அதை பரிசோதனை செய்யும் போதும் சரியான கவனம் செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு முறை பரிசோதிக்கும் போதும் அந்த நாள், நேரம் போன்ற வற்றை குறித்துவையுங்கள். ஒவ்வொரு முறை பரிசோதனை செய்த பிறகும் அது காண்பிக்கும் அளவை முந்தைய அளவோடு ஒப்பிட்டு பாருங்கள்.தொடர்ந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கவனியுங்கள். அதிகப்படியான மாற்றம் தெரிந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
No comments:
Post a Comment