Deficiency : வளரும் பிள்ளைக்கு அடிக்கடி காய்ச்சலா காரணம் இந்த சத்து குறைபாடும் இருக்கலாம்.. - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 16 December 2019

Deficiency : வளரும் பிள்ளைக்கு அடிக்கடி காய்ச்சலா காரணம் இந்த சத்து குறைபாடும் இருக்கலாம்..

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

குழந்தைகள் ஆரோக்கியம் குறைந்து அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் பிரச்சனைகளுக்கு உள்ளாவது அதிகரித்துவருகிறது. இதற்கு காரணம் வைட்டமின் சத்து குறைபாடு தான் என்கிறார்கள். குறிப்பாக வளரும் குழந்தைகளின் எலும்பு சத்தை பலப்படுத்தவும், உறுதியாக்கவும் சிறுவயதிலிருந்தே குழந்தைகள் தயாராக வேண்டுமென்றால் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் வளர்க்க வேண்டும்.

​வைட்டமின் சத்து

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது வைட்டமின் டி சத்துதான் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். பொதுவாக வைட்டமின்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று கொழுப்பில் கரையக்கூடியவை என்றும் இரண்டாவது நீரில் கரையக்கூடியவை என்றும் சொல்லலாம்.

இதில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி,இ மற்றும் கே வைட்டமின்கள் ஆகும். நீரில் கரையக்கூடியவை வைட்டமின் பி மற்றும் சி வைட்டமின் ஆகும். பல்வேறு விதமான உணவு வகைகளில் நிறைந்திருக்கும் வைட்டமின்களை சரியாக குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதில் வைட்டமின் டி முற்றிலும் வேறுபட்டது. இயற்கையான முறையில் மட்டுமெ இந்த சத்தை பெறமுடியும்.

வைட்டமின்களில்

தேவை

நீரில் கரையக்கூடிய கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் இரண்டுமே முக்கியமானவை . அதனால் இதில் எதிலுமே குறைபாடில்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். அதிலும் முக்கியமான வைட்டமின்களில் குறைபாட்டில் மிகவும் முக்கியமானது வைட்டமின் டி குறைபாடு தான். 60 க்கும் மேற்பட்ட வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படும் குறைபாட்டில் முக்கியமாக விளங்குகிறது வைட்டமின் டி குறைபாடு என்று தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் 2018 ல் தெரிவித்திருக்கிறது.

இந்தியன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் பிராக்டிஸ் என்னும் இதழ் 2014 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் இந்தியர்களில் தோராயமாக 70% மக்கள் இந்த குறைபாட்டோடு இருப்பது தெரிய வந்தது.

​டி என்பது

உடலில் வைட்டமின் டி என்பது 30 நானோகிராம் அளவுக்கு குறைவாக இருந்தால் அது வைட்டமின் டி சத்து குறைபாடு என்று சொல்லலாம். இது அதிக அளவில் குறையும் போது அதாவது அளவீடுக ளில் 10 நானோகிராம் வரை குறைந்திருந்தால் அது வைட்டமின் டி குறைபாடு என்று சொல்லலாம். இந்த வைட்டமின் டி குறைபாடு உடலுக்கு வழங்கும் நன்மைகள் ஏராளம்.

உடலில் மரபணுக்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் வேலையை வைட்டமின் டி தான் செய்து வருகிறது. உடலில் கால்சியம், பாஸ்பரஸ் எலும்புகளின் அடர்த்தியையும், எலும்பை பலப்படுத்தவும் குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சியில் பற்கள் மற்றும் எலும்புகளை உறுதிப்படுத்தவும் உதவுகி றது. இது சிறப்பாக பாதுகாக்க வைட்டமின் டி உதவுகிறது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக ரிக்கவும், புற்றுநோய் பாதிப்பிலிருந்து நம்மை மீட்க வைட்டமின் டி சத்து தேவை.

​குறைபாட்டு அறிகுறிகள்

இந்த சத்து குறைபாடு அவ்வளவு எளிதாக கிடைக்கிறது. இது குறையும் போது உடலில் ஆரோக்கிய பிரச்சனைகள் உண்டாகும். அடிக்கடி உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த குறைபாடு பலவிதமான நோய்களை உண்டாக்கிவிடும்.

உடல் வலு, மூட்டு வலி உடல் சோர்வு, பலவீனம் போன்றவை தொடர்ந்து இருக்கும். எலும்புகள் உறுதியிழந்து மென்மையாக இருக்கும். தசைகளில் பிடிப்பு, எலும்பு பலவீனமாக இருப்பதால் அவை உடையும் சூழல், பல் வலுவிழந்து போவது போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு ரிக்கட்ஸ் என்னும் நோயை உண்டாக்கும். இந்த சத்து நுரையீரலை வலுப்படுத்தும் என்பதால் இந்த குறைப்பாடு நேரும் போது சுவாச பிரச்சனையை அதிகரிக்கும். இவைதவிர எலும்பு அழற்சி, எலும்பு புரை, தசை வலுவிழப்பு, தசைவலி,தைராய்டு, உடல் பருமன் போன்றவை உண்டாகக்கூடும். அதிகப்படியன குறைபாடு முடக்குவாதம் எலும்பு முறிவு பிரச்சனையைக் கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

​காரணமும் தீர்வும்

இயற்கையாக சூரியஒளியிடமிருந்து பெற்று வந்த வைட்டமின் டி சத்து இப்போது சூரிய ஒளி படா மல் பாதுகாத்து கொள்வதால் உண்டாகிறது. செலவில்லாமல் இந்த சத்தை எளிதாக பெறலாம். சூரிய ஒளியிடமிருந்து வரும் புற ஊதா கதிர்கள்.அதிகாலை நேரத்தில் இள வெயிலில் இந்த சத்துகள் நிறைந்திருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் சூரிய ஒளியில் காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை இருப்பது நல்லது.

வெளியில் செல்லும் போது குழந்தைகளுக்கு சன் ஸ்க்ரின் லோஷன் தடவ வேண்டாம். இதனால் புற ஊதாகதிர்கள் சருமதுளைகளுக்குள் ஊடுருவது தடுக்கப்பட்டு வைட்டமின் டி சத்து இயற்கையாக பெறமுடியாமல் இருக்கிறது.

குழந்தைகளுக்கு தினமும் பால், நெய். வாரம் இருமுறை முட்டை, மீன், போன்றவற்றை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். அதிகளவு குறைபாடு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு மாத்திரைகள் வாங்கி தரலாம்.

இப்போது நினைவுபடுத்தி பாருங்கள். உங்கள் குழந்தை அடிக்கடி காய்ச்சலை சந்தித்தால் இந்த வைட்டமின் 

No comments:

Post a Comment

Join Our Telegram Group