குரூப் 1 பதவிக்கான கலந்தாய்வு வருகிற 6ம் தேதி நடக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பு:
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 1 பணிகள்) 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. நேர்முகத்தேர்வு நடைபெற்ற இறுதி நாளான நேற்றே, கலந்து கொண்ட தேர்வர்களின் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் குரூப் 1 பதவிகளுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 6ம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
இதுகுறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படுவதுடன் தேர்வாணைய இணைய தளத்திலும் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment