வரும் 20 ம் தேதி பள்ளி மாணவர்கள் பிரதமரை சந்தித்து கேள்வி கேட்க தயாராக உள்ளனர்.
இது குறித்து மனித வள மேம்பாட்டுதுறை அமைச்கத்தின் இணை செயலாளர் ஆர்.சி., மீனா கூறியதாவது:மத்திய அமைச்சகத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும், மைகோவ் ஆகியவை இணைந்து சிறு கட்டுரை போட்டி ஒன்றை பரிக்ஷா பெ சர்ச்சா 2020 என்ற பெயரில் நடத்தியது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து 9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
கடந்த ஆண்டு டிச.,2 ம் தேதி முதல் டிச.,23 ம் தேதி வரையில் கட்டுரை தேர்வு நடைபெற்றது.
மூன்றாம் பதிப்பாக நடத்தப்படும் இதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் டில்லியில் உள்ள டகடோராத மைதானத்தில் பிதமருடன் பேச தயாராக உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை நாடுமுழுவதிலும் உள்ள 15 கோடி மாணவர்கள் பள்ளிகளில் நேரடியாக பார்ப்பதற்கு தேவையான ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெளி நாட்டில் பயிலும் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment