கணக்கு தணிக்கையாளர் என்ற, சி.ஏ., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆடிட்டர் பணிக்கான, சி.ஏ., பணிக்கு, இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பின் சார்பில், தேர்வு நடத்தப்படுகிறது. 2019 நவம்பரில் நடத்தப்பட்ட இறுதி தேர்வின் முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.பழைய பாடத் திட்டத்தில், 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில், ஒரு பிரிவில், 27 சதவீதம்; மற்றொருபிரிவில், 23 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு பிரிவு தேர்வுகளிலும் சேர்த்து, 10 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.புதிய பாடத் திட்டத்தில், 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில், இரண்டு பாட பிரிவுகளிலும் தேர்வு எழுதிய, 15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
முதல் பாடப் பிரிவில், 17 சதவீதம்; இரண்டாம் பாடப் பிரிவில், 28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பழைய பாடத் திட்ட தேர்வில், விஜயவாடா, கேரளாவின் மன்னார்காடு மற்றும் மும்பை மாணவர்கள், முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். புதிய பாடத் திட்ட தேர்வில், கோல்கட்டா, நொய்டா மற்றும் ஆமதாபாத் மாணவர்கள், முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment