மாணவர்களுக்கான ‘ தீக்ஷா' செயலியில் 400 புதிய விடியோக்கள் பதிவேற்றம் - KALVISEITHI | கல்விச்செய்தி

Saturday, 4 January 2020

மாணவர்களுக்கான ‘ தீக்ஷா' செயலியில் 400 புதிய விடியோக்கள் பதிவேற்றம்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


மாணவர்களுக்கான 'தீக்ஷா' செயலியில் 400 எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய விடியோக்கள் பதி வேற்றப்பட்டுள்ளன.

புதிய பாடத்திட்டத்தில் க்யூ. ஆர். குறியீடு மூலம், மாணவர்களுக்கு, பாடம் கற்பிக்கப்பட்டு வரு கிறது. இதற்கு வசதியாக ' தீஷா' எனும் செல்லிடப்பேசி செய லியை மத்திய அரசு அறிமுகப்ப டுத்தியது.இதில் சிபிஎஸ்இ முதல் அனைத்து மாநில பாடத்திட்டங் கள், வகுப்பு மற்றும் பாடவாரி யான பாடநூல்கள், பயிற்சி தேர் வுகள், கற்றல் வழிமுறைகள் டிஜிட் டல் விடியோ வடிவில் பதிவேற் றம் செய்யப்பட்டுள்ளன.

புத்தகத்தில், ஒவ்வொரு பாடத் திலும் கொடுக்கப்பட்டுள்ள க்யூ.ஆர். குறியீடு செல்லிடப்பேசி செயலி மூலமாக 'ஸ்கேன்' செய்யப் படும்போது, அதற்கான விடியோ திரைக்கு வரும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மிகவும் பயன்ப டும். மாணவர்கள் வீட்டில் படிக் கும்போது, இந்த முறையைப் பயன்படுத்தி, பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இந்தச் செயலியை தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பதிவிறக் கம் செய்துள்ளனர். தற்போது, 6 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பயன் பெறும்வகையில், 400 விடியோக்கள் புதிதாக பதிவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, எளிய அறிவியல் சோதனைகள் அடங்கிய விடியோக்கள், பாடத்தலைப்புகளுக்கு ஏற்ப, தொகுத்து வழங்கப்பட்டுள் ளன. இந்த அறிவியல் சோதனை களை, மாணவர்கள்,வீட்டிலே எளிதாக செய்து பார்க்கலாம். அரையாண்டு விடுமுறையை, பயனுள்ளதாக மாற்றலாம் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group