பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை ஜனவரி 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தொடர் பொங்கல் விடுமுறையும் வருவதால், பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுத்தேர்வுக்கான பாடங்களை நடத்தி முடிப்பதும், செய்முறை மற்றும் திருப்புதல் தேர்வுகளை நடத்தி முடிப்பதும் சிக்கலாகியுள்ளது.
இதுதொடர்பாக
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில் பொங்கல் விடுமுறையை தொடர்ந்து அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு, முழு வேலை நாளாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment