அரசு ஊழியர்கள் ஓய்வுகால பலன்களை தாமதமின்றி பெற ‘நிலுவை இல்லை’ சான்று வழங்க புதிய நடைமுறை! - KALVISEITHI | கல்விச்செய்தி

Sunday, 19 January 2020

அரசு ஊழியர்கள் ஓய்வுகால பலன்களை தாமதமின்றி பெற ‘நிலுவை இல்லை’ சான்று வழங்க புதிய நடைமுறை!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுகால பலன்களை காலதாமத மின்றி பெறும் வகையில், ‘நிலுவை இல்லை ’ சான்று வழங்குவதற்கான புதிய நடைமுறையை பணியா ளர் நலத் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.பணியாளர்களுக்கான அடிப் படைச் சட்டத்தின்படி, அரசுப் பணி யில் இருக்கும் ஒருவர் ஓய்வு பெற்றாலோ, கட்டாய ஓய்வு அளிக் கப்பட்டாலோ, விருப்ப ஓய்வு பெற் றாலோ, உரிய காலக்கெடுவுக்குள் அவருக்கான பணிக்கொடை உள் ளிட்ட ஓய்வுகாலப் பயன்கள் விடு விக்கப்பட வேண்டும்.

இதற்காக சம்பந்தப்பட்ட பணியாளர் மீது எவ் வித ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ‘நிலுவை இல்லை ’ என்பதற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்ட துறையில் இருந்து கருவூலத் துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.தற்போது இந்த நடைமுறையை தமிழக பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை எளிதாக்கியுள்ளது. குறிப்பாக, தற்போது தமிழக அரசில் ஒருங் கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு முறை உரு வாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பணியில் சேர்ந்தது முதலான அனைத்து விவரங்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

எனவே, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு முறைக்கான தரவுதளத்தில், புதிய வடிவில் நிலுவை இல்லை என்ப தற்கான சான்றினை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான பொதுவான சான்றிதழ் வடிவத்தையும் பணியாளர் நலத் துறை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, தலைமைச் செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறியதாவது:தமிழக அரசில் 36 துறைகள் உள்ளன. இந்த துறைகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக் கானவர்கள் ஓய்வு பெறும் நிலை யில், அவர்களுக்கான நிலுவை இல்லை சான்றிதழ்துறைகள் வாரியாக வெவ்வேறு வடிவத் தில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனால் ஏற்படும் காலதாமதம், குழப்பத்தை போக்கவே இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது.இதன்மூலம், சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பின் வாயிலாக சான்றிதழ்வழங்க முடியும். அந்த சான்றிதழ் உடனடியாக கருவூலத் துறைக்கு சென்று, விரைவில் செயல்பாடு கள் தொடங்கும். இந்த நடை முறையால், ஓய்வு பெறுபவர்கள் பணிக்கொடை உள்ளிட்ட சலுகை களைப் பெறுவதற்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group