ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், கவுரவ் கோச்சார் என்ற மாணவர், மாநில அளவில், முதலாம் இடம் பிடித்துள்ளார்.ஐ.ஐ.டி., போன்ற தேசிய உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு, ஜனவரி, 6 முதல், 9 வரை, இந்த தேர்வு, 'ஆன்லைன்' வழியே, 570 மையங்களில் நடத்தப்பட்டது.தேர்வு முடிவுகளை, நேற்று முன்தினம் இரவில், தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., வெளியிட்டது.
மொத்தம், ஒன்பதுலட்சம் பேர் எழுதிய தேர்வில், ஒன்பது மாணவர்கள், 100க்கு 100 மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தானில், தலா, இரண்டு மாணவர்களும், புதுடில்லி, குஜராத், ஹரியானாவில் தலா, ஒருமாணவரும், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழகத்தில், கவுரவ் கோச்சார் என்ற மாணவர், 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று, மாநில அளவில், முதலிடம் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment