ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர் நிலை I ( முதுகலை ஆசிரியர் நிலை ) க்கான கணினி வழியிலான தேர்வு 23 . 06 . 2019 மற்றும் 27 . 06 . 2019 ஆகிய இரு நாட்களில் நடைபெற்றது . இந்தத் தேர்விற்கான மதிப்பெண் முடிவுகள் 25 . 11 . 2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தேர்வு எண் விவரப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www . trb . nic . in ) 28 . 11 . 2019 அன்று வெளியிடப்பட்டது . உரிய சான்றிதழ்ழ்ள் மற்றும் பிற விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு 02 . 12 . 2019 முதல் 05 . 12 . 2019 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது . தேவையான தகுதியான கல்வித் தகுதிகள் சார்ந்து ( 10 . 04 . 2019 ) க்குள் தேர்ச்சி பெறாதவர்கள மற்றும் தேவையான கல்வித்தகுதிகள் சார்ந்து சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்கள் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 08 . 01 . 2020 , 09 . 01 . 2020 மற்றும் 10 . 01 . 2020 அன்று சென்னையில் நடைபெற உள்ளது . உரிய சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதங்கள் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . குறுந்செய்தி வழியாகவும் தகவல் அனுப்பப்படும் , அடுத்தக்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதியற்றோர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது . தனியே கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது .
Join Our KalviSeithi Telegram Group - Click Here
No comments:
Post a Comment