ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அதிமுக்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.! இன்னும் 10 நாட்களில் நடக்கபோகும் மாற்றம்.! - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 19 March 2020

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அதிமுக்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.! இன்னும் 10 நாட்களில் நடக்கபோகும் மாற்றம்.!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
IMG_ORG_1584621013706

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

இந்தாண்டு ஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தபட உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் அதற்கு முன்னோட்டமாக ஒரே மாநிலம் ஒரே ரேஷன் எனப்படும் உள்மாநில பெயர்வுத் திறன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
IMG_ORG_1584621020817

அதன்படி தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எந்தக் ரேஷன் கடையிலும் அரிசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தை சோதனை அடிப்படையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமல்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையில், ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு" திட்டம் ஏப். 1 முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ். தெரிவித்துள்ளார். ஏப். 1 ஆம் தேதி முதல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என அமைச்சர் கூறினார்

No comments:

Post a Comment

Join Our Telegram Group