சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கோரிக்கை - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 19 March 2020

சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கோரிக்கை

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கோரிக்கை



கொரோனா வைரஸ்  காரணமாக     பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு  விடுமுறை அளித்தது மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்ததை வரேற்று அதே சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்க

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
===========
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது திரையரங்குகள் மூடல், அரசு பொது நிகழ்ச்சிகள் ரத்து  ரயில் நிலையங்கள் பஸ்நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமிநாசினியை தெளித்தல் மருத்துவ மனைகளில் 24 மணி நேரமும் தமிழக முழுவதும் கொரோனா சிறப்பு மையங்களை அமைத்து கண்காணித்து வருவது வரவேற்க தக்கது

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு  கோரிக்கையை ஏற்று 10, 11, 12,ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பதால் அவர்களுக்கு கிருமிநாசினியை தெளித்து மாணவர்கள் ஆசிரியர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும், மற்றும் அங்கன்வாடி மையம் எல்.கே.ஜி முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க கேட்டுக்கொண்டோம் அதனை அப்படியே ஏற்று விடுமுறை அளித்தது

அதேபோன்று தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவாமல் பார்த்துக்கொள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு  6 நாட்கள் தற்செயல் விடுப்பு அளித்துள்ளது உண்மையாகவே வரவேற்க தக்கது,

இதனை பின்பற்றி முன்னெச்சரிக்கை அனைத்து வகை ஆசியர்களுக்கும் தற்செயல் விடுப்பு வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044

No comments:

Post a Comment

Join Our Telegram Group