Join Our KalviSeithi Telegram Group - Click Here
உங்க எலும்பு உறுதியா இருக்க சாப்பிட வேண்டிய 4 உணவு என்ன? சாப்பிட கூடாத 3 உணவு என்ன?
நாம் தெம்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எலும்பின் ஆரோக்கியம் அவசியம். நம்மளுக்கு தெரியாமலே நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் நம் எலும்பின் அடர்த்தியை குறைக்கிறது. எனவே எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது.
நம் உடலில் உள்ள ஒவ்வொரு அங்கங்களும் ஆரோக்கியமாக இருக்க வலிமையாக இருக்க ஊட்டச்சத்து என்பது அவசியம். இந்த ஊட்டச்சத்துக்கள் நாம் உண்ணும் உணவில் இருந்து பெறப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது நம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம், விட்டமின் டி அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களுமே எலும்பின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் மிகவும் அவசியம். எலும்புகள் தான் நம் உடலுக்கு பக்க பலத்தை கொடுக்கிறது. உடம்பை ஆதரிக்கிறது. எந்தவிதமான சூழல்களில் இருந்தும் வெளிப்புறக் காயங்களில் இருந்தும் நம்மை காக்கிறது. இது தவிர எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் கே, வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை மிகவும் முக்கியம். இதோ உங்க எலும்பு ஆரோக்கியத்திற்கான உணவுகள் இங்கே உள்ளன.
சோயா பீன்ஸ்n
சோயா பீன்ஸ் புரதம் மற்றும் கால்சியத்தின் மிகச்சிறந்த மூலமாக உள்ளது. இது குறித்து ஆராய்ச்சி செய்த போது சோயா பீன்ஸ்யை உட்கொள்வது மாதவிடாய் நின்ற பெண்களின் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எனவே மாதவிடாய் நின்ற பெண்கள் சோயா பீன்ஸை எடுத்துக் கொள்வது நல்லது.
பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளை எல்லோரும் உணவில் சேர்க்க வேண்டும். காலே, ப்ரோக்கோலி மற்றும் கீரை போன்ற காய்கறிகள் பல்வேறு வகையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. அவை உங்க எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல பிற நாள்பட்ட நோய்களையும் விரட்டுகின்றன.
பூசணி விதைகள்
பூசணி விதைகள் மக்னீசியம் அடங்கிய மூலமாகும். இது உங்க எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மெக்னீசியத்தை அதிக அளவில் உட்கொள்வது எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது. பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அவை வீக்கத்தை குறைத்து எலும்பின் வலிமையை பராமரிக்கின்றன.
மத்தி மீன்
இந்தியாவில் பரவலாக உண்ணப்படும் மீன்களில் மத்தி மீனும் ஒன்றாகும். கேரளா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதியில் இது பிரதான உணவின் ஒரு பகுதியாகும். மத்தி மீனில் கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி 12, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற எலும்புகளை உருவாக்கும் தாதுக்களின் வளமான மூலங்கள் காணப்படுகின்றன.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள்
அதிக சோடியம் அல்லது உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் நம்முடைய இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த உணவுகள் நம் எலும்புகளுக்கு நல்லது கிடையாது. உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும் போது அது கால்சியம் சமநிலையை பாதிக்கிறது. எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை குறையுங்கள்.
காஃபைன் வேண்டாம்
காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது நமக்கு சுறுசுறுப்பை தந்தால் கூட 300 மி. கிமிற்கு மேல் காபி குடிப்பது உங்க எலும்பை பாதிக்க வாய்ப்புள்ளது
செயற்கை பானங்கள் வேண்டாம்
சர்க்கரை அதிகம் கொண்ட பானங்கள் உங்க பற்களுக்கும் எலும்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே முடிந்த வரை சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களில் இருந்து கொஞ்சம் விலகியே இருங்கள். 2006 ஆம் ஆண்டின் படி, கார்பனேற்றப்பட்ட பானங்கள், வயதான பெண்களில் குறைந்த எலும்பு அடர்த்திக்கு காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
Friday, 26 June 2020
Home
Unlabelled
உங்க எலும்பு உறுதியா இருக்க சாப்பிட வேண்டிய 4 உணவு என்ன? சாப்பிட கூடாத 3 உணவு என்ன?
உங்க எலும்பு உறுதியா இருக்க சாப்பிட வேண்டிய 4 உணவு என்ன? சாப்பிட கூடாத 3 உணவு என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment