எடை குறைய இந்த 5 விஷயத்த மட்டுமே நம்பாதீங்க... குறையாது... - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday, 26 June 2020

எடை குறைய இந்த 5 விஷயத்த மட்டுமே நம்பாதீங்க... குறையாது...

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here எடை குறைய இந்த 5 விஷயத்த மட்டுமே நம்பாதீங்க... குறையாது...

சிலர் எப்படியாவது தங்களுடைய எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யார் சொல்லும் டயட்டையும் முயற்சி செய்யாமல் தானே முறையாக ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும் என்று சில முயற்சியில் இறங்குவார்கள். அதில் சில விஷயங்கள் ஆரோக்கியமானது தான். ஆனால் அதில் நீங்கள் நினைப்பது போல எடை எதுவும் குறைவதில்லை என்பது தெரியுமா உங்களுக்கு?... அது என்னென்ன விஷயம்னு நீங்களே பாருங்க.
 

இந்த எடை இழப்பு ட்ரிக்ஸ் எல்லாம் சும்மா உப்பு சப்புக்கு மட்டும் தான், வேலையே செய்யாதாம்
இப்போது எல்லாம் நீங்க யார வேணும்னாலும் கேட்டு பாருங்க வெயிட்ட குறைக்க டயட் இருக்கேன், வெயிட்ட குறைக்க ஓடுறேன், வெயிட்ட குறைக்க டான்ஸ் ஆடுறேன், வெயிட்ட குறைக்க பிட்னஸ் பேண்ட் மாட்டி இருக்கேன் என்று ஆளுக்கு ஒன்னு சொல்லுவாங்க. காரணம் இங்க உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற போதை.


அதனால் யார் சொன்னாலும் காரணமே இல்லாமல் எல்லாத்தையும் ஃப்லோ பண்ண தயாராகி விடுகிறார்கள். அவர்கள் ஃப்லோ பண்ற விஷயங்கள் நல்லதா கெட்டதா என்று கொஞ்சம் கூட யோசிக்கிறதே இல்லை. சில பேர் இதல கொஞ்சம் உணர்ச்சி வசத்தில எடை இழப்பு என்பதை தங்கள் நியூ இயர் குறிக்கோளாகக் கூடக் எடுத்துக் கொள்கின்றன. உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கம் தப்பில்லை. ஆனால் அதை நாம் சரியான வழியில் முயற்சிக்கிறோமா என்பது மிகவும் முக்கியமானது.
​நன்மை தருமா?


அப்போ உங்களுக்கு உடல் எடை குறைப்பு குறித்து அனைத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தேவையில்லாத மேம்போக்கான ட்ரிக்ஸ்களையும் டிப்ஸ் களிலும் விழுந்து விடக் கூடாது. அதனால் உங்கள் நேரமும் எனர்ஜியும் தான் செலவாகும். ஆனால் எடை என்னவோ குறையாமல் அப்படியே தான் இருக்கும். இதற்குத்தான் நாங்கள் உங்களுக்கு சில உதவிகளை செய்யப் போகிறோம். இதுவரை உடல் எடை குறைப்பு குறித்து நாம் நம்பி வந்த புகழ்பெற்ற தவறான 5 விஷயங்களை பற்றி இங்கே பேச உள்ளோம். உண்மையைச் சொல்லப் போனால் இந்த 5 விஷயங்கள் உங்களுக்கு ஒன்னத்துக்கும் உதவாத விஷயங்கள் மட்டுமே. எனவே தெளிவே இல்லாமல் இந்த விஷயங்களை செய்யாதீர்கள். இது உங்களுக்கு எந்த வித நன்மைகளையும் தராது.
​உடல் கழிவுகள்


நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் உடல் எடையை குறைத்தல் முடியும். உடல் எடை இழப்பு என்று வந்தாலே உடம்பை சுத்தப்படுத்துவது தான் கண் முன் வந்து நிற்கிறது. ஆனால் உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் உடல் எடையை எல்லாம் குறைக்க முடியாது. தேசிய சுகாதார நிறுவனங்களின் ஆய்வின்படி, நச்சுக்களை வெளியேற்ற உதவும் உணவுகள் எடையை இழக்க உங்களுக்கு உதவாது, உண்மையில் அது தீங்கு தான் விளைவிக்கும் என்கிறார்கள். அப்படியே நீங்கள் உடம்பில உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை இழந்தால் கூட அது தற்காலிகமானது மட்டுமே. நீங்கள் மறுபடியும் நல்லா சாப்பிடும் போது உடல் எடை எகிறத்தான் செய்யும்.

அதுமட்டுமல்லாமல் கடைகளில் நீங்கள் வாங்கி குடிக்கும் நச்சுக்களை வெளியேற்றும் பானங்களில் அதிகப்படியான சர்க்கரை கலந்து இருக்கிறது. இது உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக கலோரிகளை அதிகரிக்க ஆரம்பித்து விடும்.
​நோ கார்போ முறை


உடல் எடையை இழக்க வேண்டும் என்றால் கார்போஹைட்ரேட் உணவை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே பரவியுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். இது உடலுக்கு தேவையான ஆற்றலாக செயல்படுகிறது. எனவே நீங்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்தால் சோர்வாகவும், பலவீனமாகவும் உணரக் கூடும்.

இதற்குப் பதிலாக நீங்கள் சாப்பிடும் எளிய கார்போஹைட்ரேட் உணவிற்கு பதிலாக அதிக நார்ச்சத்துகள் உள்ள கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் ஒரு நாளைக்கு 35-38 கிராம் வரைக்கும் எடுத்து வரலாம். இதில் முழு தானியங்கள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்
​கொழுப்பே வேண்டாம்


கொழுப்பு அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டெடிக்ஸ் நடத்திய ஆய்வின்படி, கொழுப்பு உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாகும். ஆனால், எல்லா கொழுப்புகளும் சமமாக உருவாக்கப்படவில்லை. நல்ல ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு உங்கள் உணவில் இருந்து நிறைவுற்ற கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்புகளை மட்டுமே நீக்க வேண்டும். ஆனால் ஆரோக்கியமான கொழுப்புகளான மீன்கள், நட்ஸ் வகைகள் மற்றும் ஆலிவ் ஆயில் போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் உங்களுக்கு ஆற்றலை வழங்குவதோடு எடை இழப்பிற்கும் உதவி செய்கிறது. சந்தையில் கிடைக்கக் கூடிய குறைந்த கொழுப்பு பொருட்களை வாங்காதீர்கள். இதில் சர்க்கரை சேர்க்கப்பட்டு இருக்கும். எதையும் வாங்கும் முன் அதன் உணவுப் பட்டியலை படித்து வாங்குங்கள்.
​இறுக்கமாக பேண்ட்டு


பிட்னஸ் பேண்ட் அணிந்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்பது ஒரு கட்டுக்கதை. கொஞ்சம் யோசித்து பாருங்கள் வெறும் பேண்ட்டை அணிந்து கொண்டால் எப்படி உடல் எடையை குறைக்க முடியும். நீங்கள் கையில் போடும் பிட்னஸ் பேண்ட்டுக்கும் உடல் எடை க்கும் என்ன சம்பந்தம். நீங்கள் உடலை எடையை குறைக்க வேண்டும் என்ற வைராக்கியம், குறிக்கோள் உங்கள் கையில் இருந்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். இதற்கு பிட்னஸ் பேண்ட் அவசியம் இல்லை.
​வொர்க் அவுட் மட்டும்


உடல் ரீதியாக நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க தினமும் உடற்பயிற்சி செய்வது உதவியாக இருக்கும். உடற்பயிற்சி தசைகளை கட்டமைக்க உதவுகிறது. ஆனால் உடற்பயிற்சி உடல் எடையை குறைக்க அந்தளவுக்கு உதவி செய்யாது. சிலர் அதிக உடற்பயிற்சி செய்தால் அதிக உடல் எடையை குறைக்க முடியும் என்று நம்புகின்றனர். உடற்பயிற்சியுடன் நீங்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றினால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். எனவே எதையும் சரியாகக் புரிந்து கொண்டு செயல்படுங்கள். உங்கள் சமையலறை உணவுகளிலும் உங்கள் உடற்பயிற்சியிலும் மாற்றம் செய்யும் போது உடல் எடை யிலும் மாற்றம் நேரிடும்.

இந்த 5 விஷயங்களை மட்டும் இனிமேலாவது நம்பி உடல் எடையை குறைக்க முயலாதீர்கள். எதையும் மேம்போக்காக நம்பாமல் ஆராய்ந்து செயல்படுவது நன்மை பயக்கும்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group