தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்! 5 முக்கிய உற்பத்தி நிறுவனங்களுக்கு எடப்பாடி அழைப்பு - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 22 June 2020

தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்! 5 முக்கிய உற்பத்தி நிறுவனங்களுக்கு எடப்பாடி அழைப்பு

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்! 5 முக்கிய உற்பத்தி நிறுவனங்களுக்கு எடப்பாடி அழைப்பு

சென்னை:

கொரோனா ஊரடங்கினால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்கள் உற்பத்தி செய்யும் முக்கிய 5 நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். அதில், தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள், தேவையான வசதிகள் செய்து தரப்படும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலால் உலக பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்த்திட முடிவு எடுத்துள்ளன. அண்மையில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, கேட் ஸ்பேட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் லிஸ்ஃப்ரேஸர், பாசில் குழுமத்தின் தலைவர் கோஸ்டா கார்ட்கோடிஸ், நைக் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஜான் டான்ஹூ, அடிடாஸ் ஏஜி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் காஸ்பர் ரோர்ஸ்டட், மேட்டல் இங்க் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் யோனன் கிரைஸ் ஆகிய 5 முன்னணி நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 'தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்க சலுகைகள் வழங்கிடும்' என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை… எடப்பாடி உறுதி
சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல்… முதல்வர்
திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம்! எடப்பாடி திறந்து வைத்தார்

, , , ,

கொரோனாவுக்கு மருத்து கண்டுபிடிக்கும் பணியில் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம்.. Next கொரோனா தீவிரம்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 80 பேர் பாதிப்பு..

No comments:

Post a Comment

Join Our Telegram Group