Join Our KalviSeithi Telegram Group - Click Here
சீன விவகராத்தில் இந்தியா செய்த மிகப்பெரிய முட்டாள்தனம்..!
சீன விவகராத்தில் இந்தியா செய்த மிகப்பெரிய முட்டாள்தனம்..!
இந்தியாவில் இருந்து போதிதர்மன்கள் மட்டும் கிளம்பினால் போதாது. பொருளாதாரத்திலும் படை பலத்திலும், ஆயுத பலத்திலும் அசரடிக்கும் வகையில் முன்னேற வேண்டும்.
ஆசியாவில் சீன டிராகன் வாலாட்டி மிரட்டி வருவதற்கு கல்வான் பள்ளத்தாக்கில் முதலடி கொடுத்துள்ளது இந்திய ராணுவம். 1967ல் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் 300 சீன சிப்பாய்களை கொன்று குவித்து சீனாவை ஓடஓட விரட்டியடித்தது. சுதந்திரம் பெற்றதில் இருந்து பாகிஸ்தானுடன் 4 போர்களையும், சீனாவுடன் 1 போரையும் 1967ல் ஒரு சிறிய அளவிலான சண்டையையும் நாம் சந்தித்து உள்ளோம்.
இதன் காரணமாக நமது பாதுகாப்பு கொள்கையும் ஏனோ பாகிஸ்தானை மட்டும் கருத்தில் கொண்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் சீன பிரச்சினையை தற்போது இருக்கும் அரசு உட்பட எந்த அரசுமே அதிக சிரத்தையுடன் கையாண்டதில்லை. சீனாவை நம்மிடம் இருந்து தள்ளி வைக்க மிக வலிமையான பொருளாதாரம் இன்றியமையாதது ஆகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அத்தகைய வலிமையான பொருளாதாரத்தை இன்னும் பெறவில்லை.
அதனால் தான் சீன ராணுவம் இந்திய ராணுவத்தை விட பன்மடங்கு அனைத்து பிரிவுகளிலும் ஒரு படி முன்னேறி உள்ளது. இந்தியாவில் 13 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். சீனாவில் 26 லட்சத்து 93 லட்சம் வீரர்கள் உள்ளனர். இந்தியா 55.3 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், சீனா 224 பில்லியன் டாலர்களையும் ராணுத்துக்கு நிதியாக ஒதுக்குகின்றன.
இந்தியாவிடன் 2082 படைவிமானங்களும் சீனாவிடம் 3,187 படை விமானங்களும் இருக்கின்றன. தாக்குதல் விமானங்கள் இந்தியாவிடம் 694ம் சீனாவிடம் 1564 விமானங்களும் உள்ளன. இந்தியாவிடம் 17 தாக்குதல் ஹெலிக்காப்டர்களும், சீனாவிடம் 281 தாக்குதல் ஹெலிக்காப்டர்களும் உள்ளன. இந்தியாவிடன் 4184 டாங்குகளும், சீனாவிடம் 13 ஆயிரத்து 050 டாங்குகளும் உள்ளன. இந்தியாவிடம் 2815 கவச வாகனங்களும், சீனாவிடம் 40 ஆயிரம் கவச வாகனங்களும் இருக்கின்றன. இந்தியாவிடம் 16ம் சீனாவிடம் 76ம் இருக்கின்றன. ஆக ராணுவ வலிமை, ஆயுத வலிமையில் இந்தியாவைவிட சீனா முன்னணியில் இருக்கிறது.
அத்தகைய வலிமையான பொருளாதாரம் இருந்தால் மட்டுமே நமது பாதுகாப்பு திறனை மிகப்பெரிய அளவில் வளர்க்க முடியும். உதாரணமாக சீனா 1962ல் இருந்து தற்போது அடைந்திருக்கும் நிலை எடுத்துகாட்டு. இன்று சீனாவின் பொருளாதாரம் நமது பொருளாதாரத்தை விட கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகமாகும் இந்த பொருளாதார வலிமையால் சீன ராணுவ பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பின்னர் அந்த பொருளாதார சக்தியின் மூலமாக நமது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும். இத்தனை வருட கால தாமதமே மிகப்பெரிய தவறு இனியும் தாமதிக்காமல் உடனே விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எப்போதும் கல்வானை போன்றும் சூழல்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஸ்கர்டு தளத்தை சீன விமானப்படை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால் அது நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அது அமையும் என்பதில் எவ்வித ஐயமில்லை. இதுபோன்ற தவறுகளை சரிது செய்து இந்தியா பொருளாதார, ராணுவ ரீதியாக வலுப்பெற வேண்டும் என்பதே நமது எண்ணம். ஆகவே வலிமையான பொருளாதாரத்திற்கு நாம் முதலில் அடித்தளமிட வேண்டும். இந்தியாவில் இருந்து போதிதர்மன்கள் மட்டும் கிளம்பினால் போதாது. பொருளாதாரத்திலும் படை பலத்திலும், ஆயுத பலத்திலும் அசரடிக்கும் வகையில் முன்னேற வேண்டும்.
Monday, 22 June 2020
Home
Unlabelled
சீன விவகராத்தில் இந்தியா செய்த மிகப்பெரிய முட்டாள்தனம்..!
சீன விவகராத்தில் இந்தியா செய்த மிகப்பெரிய முட்டாள்தனம்..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment