Join Our KalviSeithi Telegram Group - Click Here
செம்ம பிளான்! சீன எல்லை முழுவதும் விறுவிறுப்பாக சாலைகள் அமைக்கும் இந்தியா
செம்ம பிளான்! சீன எல்லை முழுவதும் விறுவிறுப்பாக சாலைகள் அமைக்கும் இந்தியா
டெல்லி: சீன எல்லையில் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதை வேகப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியா சீனா எல்லையில் உள்ள 73 சாலைகளில் 42 சாலைகளை மேம்படுத்தும் பணி 2022ம் ஆண்டுக்குள் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருணாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் 3,488 கி.மீ நீளமுள்ள எல்லையை இந்தியா, தனது அண்டை நாடான சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இந்த 3,488 கி.மீ பகுதிகளில் மொத்தம் 73 சாலைகள் உள்ளதாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது. அவற்றை மேம்படுத்தும் பணியை முழு வீச்சில் இந்தியா செய்து வருகிறது.
உள்கட்டமைப்பு
இந்த 73 சாலைகளில், 3,410 கி.மீ நீளமுள்ள 61 சாலைகளை , எல்லைச் சாலைகள் அமைப்பிடம் (பி.ஆர்.ஓவிடம்) ஒப்படைக்கப்பட்டன, மீதமுள்ளவற்றை மத்திய பொதுப்பணித்துறை மற்றும் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை ஆகியவை சாலைகளை அமைக்கும் பணிகளை செய்து வருகின்றன.. சாலைகள் தவிர, யுக்தி சார்ந்த உள்கட்டமைப்பான மொபைல் கோபுரங்கள் அமைப்பதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
42 சாலைகள் மேம்பாடு
இந்திய சீன எல்லையில் உள்ள 73 சாலைகளில் 28 சாலைகளில் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 33 சாலைகள் கட்டுமானத்தில் உள்ளன, மீதமுள்ள சாலைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. 42 சாலைகளை மேம்படுத்தும் பணிகள் 2022ம் ஆண்டுகள் முடியும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாமதம் ஆகிவிட்டது
அதிகாரப்பூர்வ வட்டாரங்களின் தகவல்படி, அருணாச்சல பிரதேசம் மற்றும் உத்தர்கண்டில் பெரும்பாலான சாலை திட்டங்கள் நிலுவையில் உள்ள நிலையில், லடாக்கில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. இந்த திட்டங்களில் சில 2018 க்குள் முடிக்கப்பட இருந்தன, ஆனால் முக்கியமாக யுக்தி சார்ந்த பாதுகாப்பை கருத்தில், சுற்றுச்சூழல் அனுமதி, வரையறுக்கப்பட்ட வேலை காலம், கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் மற்றும் இயற்கை பேரரிடர்கள் போன்ற காரணங்களால் தாமதமாகிவிட்டது" என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
சீன ஊடுருவல்கள்
இதுபற்றி சீனாவில் எல்லையான கிழக்கு லடாக்கில் உள்ள டாங்சே தொகுதியைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் தாஷி நம்கியால் கூறுகையில், எல்லைச் சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) பல எல்லை கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான போர்ட்டர்கள் மற்றும் தொழிலாளர்களை வைத்து உண்மையான எல்லைக் கட்டுபாட்டு கோட்டு பகுதிகளில் சாலை அமைத்தார்கள். கால்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரியில் சீன ஊடுருவல்கள் அதிகரித்துள்ளது.அவர்கள் தங்கள் பகுதியில் கட்டமைப்பையும் அதிகரித்து வருகிறார்கள்- எனவே லடாக்கில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள யுக்தி சார்ந்த இடங்களுக்கு செல்லும் முக்கியமான சாலைகளை மேம்படுத்துவதில் எல்லை பாதுகாப்பு படை அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார்
Friday, 26 June 2020
Home
Unlabelled
செம்ம பிளான்! சீன எல்லை முழுவதும் விறுவிறுப்பாக சாலைகள் அமைக்கும் இந்தியா
செம்ம பிளான்! சீன எல்லை முழுவதும் விறுவிறுப்பாக சாலைகள் அமைக்கும் இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment