Join Our KalviSeithi Telegram Group - Click Here
தமிழகத்தில் கரோனா கண்காணிப்பு அதிகாரிகள் இருவர் இடமாற்றம்
தமிழகத்தில் கரோனா நோய்த்தடுப்புப் பணியில் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இயங்குகிறது.
இந்நிலையில் மாவட்டங்களில் நடக்கும் கண்காணிப்புப் பகுதிகளை ஆய்வு செய்ய கண்காணிப்பு அலுவலர்களாக 33 ஐஏஎஸ் அதிகாரிகளை தலைமைச் செயலாளர் கடந்த 19-ம் தேதி நியமித்து உத்தரவிட்டார். இதில் முதன்மைச் செயலர்கள் அந்தஸ்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். ஐஏஎஸ் அதிகாரி கஹந்தீப் சிங் பேடி, முன்னாள் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோரும் இதில் அடக்கம்.
இந்நிலையில் கண்காணிப்பு அலுவலர்களில் இரண்டு பேரை மாற்றி தலைமைச் செயலர் ஆணை பிறப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர், முதன்மைச் செயலர் சந்திரமோகன் மதுரை கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டக் கண்காணிப்பு அலுவலர், முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ராமநாதபுரம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Monday, 22 June 2020
Home
Unlabelled
தமிழகத்தில் கரோனா கண்காணிப்பு அதிகாரிகள் இருவர் இடமாற்றம்
தமிழகத்தில் கரோனா கண்காணிப்பு அதிகாரிகள் இருவர் இடமாற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment