Join Our KalviSeithi Telegram Group - Click Here
தொப்பைய மட்டும் குறைக்கணுமா? உங்க சாப்பாட்டு பழக்கத்த இப்படி மாத்துங்க...
உடல் பருமனாலும் குறிப்பாக, தொப்பையாலும் அவதிப்படுவர்கள் ஏராளம். அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. சிலரெல்லாம் ஒல்லியாகத் தான் இருப்பார்கள். ஆனால் தொப்பை மட்டும் இருக்கும். அது பார்ப்பதற்கே மிகவும் அசிங்ககமாகத் தோன்றும். அதில் ரெண்டு வகையுண்டு. ஒன்று தொளதொளவென இருக்கும் தொப்பை. மற்றொன்று கல்லு மாதிரி இருக்கும் தொப்பை. இரண்டில் எது கரையக்கூடியது. எது மிகவும் ஆபத்தானது என்பது பற்றி தான் இந்த பகுதியில் விளக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
தொப்பை தான் பிரச்சினையா?
தொப்பை என்பது யாருமே விரும்பாத மற்றும் தர்ம சங்கடமான ஒரு விஷயமாகும். அதிகப்படியாக எடையை குறைக்க நினைக்கும் மக்கள் தங்களின் தொப்பையைத் தான் முதலில் குறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தொப்பைக் கொழுப்பானது பார்ப்பதற்கு கொஞ்சம் சங்கடமான விஷயம் மட்டுமல்லாமல் அது நமது உடல் ஆரோக்கியத்துக்கும் பெரும் கேடு விளைவிப்பதாகும். அதிகப்படியான உடல் எடை உள்ளவர்களுக்கு மட்டும் தொப்பை கொழுப்பு பிரச்சினை என்று இல்லை ஒல்லியாக இருப்பவர்களுக்கும் இருக்கக்கூடும். இது நம்முடைய உடலுக்குள் எல்லா வகையான நோய்களையும் உள்ளே கொண்டு வருவதற்கான வாசலாக அமைந்து விடுகிறது.
ஆபத்து விகிதம்
பார்த்தவுடன் வயிற்றில் குண்டாக தெரிவது மட்டுமே தொப்பை கொழுப்பு அல்ல. நாம் நம் உடலின் புறப்பகுதியில், நம்முடைய கண்ணுக்குத் தெரியும் தொப்பையை மட்டுமே நம்முடைய உடலில் உள்ள கொலஸ்ட்ரால் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய கண்ணுக்குத் தெரியாமல் கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்ற உடலின் உள்ளுறுப்புகளிலும் கொழுப்பு படிந்திருக்கக் கூடும். இது மறைந்திருக்கக் கூடும். இது மிகவும் ஆபத்தானதாகும். அதிலும் சமீப காலமாக கல்லீரலில் கொழுப்பு படிதல் பிரச்சினை மிக அதிக அளவில் இருந்து வருகிறது. இத்தகைய கொழுப்பானது ஒல்லியாக மற்றும் சரியான உடல் அமைப்பை கொண்ட மக்களிடமும் காணப்படுகிறது இதனை விசரல் பேட் என்று அழைப்பார்கள். நாங்கள் உங்களுக்கு கடின மற்றும் மென்மையான தொப்பைக்கு இடையிலும் கூட வேறுபாடு உண்டு.
வயிற்றுப்பகுதி தொப்பை
பொதுவாக இது தோலுக்கு அடியில் அனைவரும் பார்க்கக் கூடியதாக இருக்கும். தோல் பகுதி, கையின் அடிப்பகுதி, தொடை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் தொளதொளவென தொங்குகின்ற மென்மையான தொப்பை உடையவர்களே உலக அளவில் அதிகம் இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இது பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தாலும் நம்முடைய உடலுக்குத் தேவையான சக்தி மற்றும் உங்களுடைய உடல் எடையைக் கணிசமாக வைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது. மேலும் உங்களுடைய பசியினைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் செய்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த வகையான தனது உடல் எடையை மிதமாகத் தான் வைத்துக் கொள்ளுமே தவிர, பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதில்லை என்றே மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.
எது ஆபத்து?
விசரல் ஃபேட் என்று சொல்லப்படுகின்ற வயிற்றுப் பகுதியில் உள்ள தொப்பை கொழுப்பானது மீதமுள்ள 10% ஆக இருக்கிறது. இது நாம் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய ஒன்றாகும். இந்த வகையான விசரல் ஃபேட் ஆனது நம்முடைய உடலில் ஹார்மோன் பிரச்சனைகளை உருவாக்குவதோடு இன்சுலின் எதிர்ப்பாக செயல்பட்டு தீராத நோய்களான உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, டைப் 2 நீரிழிவு நோய், கல்லீரல் வீக்கம் ஆகியவற்றோடு வேறு சில நோய்களுக்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
என்ன உணவு மாற்றம் தேவை?
இத்தகைய ஆபத்து நிறைந்த கொழுப்பைக் குறைக்க வேண்டுமென்றால், முதலில் உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
சுத்திகரிக்கப்படாத வெள்ளைள சர்க்கரை மற்றும் டிரான்ஸ் ஃபேட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
குறைந்த கார்போ மற்றும் புரதங்கள் நிறைந்த உணவு, பழங்கள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மட்டுமல்லாமல் 500க்கும் குறைவான கலோரிகளை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் உடலில் 500 கிராம் கொழுப்பினை ஒரு வாரத்தில் குறைக்க முடியும்.
தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் வரையிலான உடற்பயிற்சி, ஓட்டம், நடைபயிற்சி, சைக்கிளிங் மற்றும் ஏரோபிக்ஸ் மூலமும் மென்மையான மற்றும் கடின கொழுப்பு எனப்படும் விசரல் பேட் குறைக்க முடியும். நடைப்பயிற்சி செல்வதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
Friday, 26 June 2020
Home
Unlabelled
தொப்பைய மட்டும் குறைக்கணுமா? உங்க சாப்பாட்டு பழக்கத்த இப்படி மாத்துங்க...
தொப்பைய மட்டும் குறைக்கணுமா? உங்க சாப்பாட்டு பழக்கத்த இப்படி மாத்துங்க...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment