சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.! இன்று முதல் அமல்..! - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 1 July 2020

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.! இன்று முதல் அமல்..!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.! இன்று முதல் அமல்..!

டெல்லி: மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4.50 வரை அதிகரித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் 1ம் தேதி வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தை பொருத்து ஏற்றம், இறக்கம் இருக்கும். அந்த வகையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து 2வது மாதமாக மானியம் இல்லாத சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட ஒரு மானியம் இல்லாத சிலிண்டர் 1 ரூபாய் உயர்ந்துள்ளது.

கொல்கத்தாவில் ரூ.4.50 அதிகரித்து உள்ளது. மும்பையில் ரூ.3.50ம், சென்னையில் ரூ.4ம் உயர்ந்துள்ளது. விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருக்கின்றன.

No comments:

Post a Comment

Join Our Telegram Group