ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - மத்திய அரசு சொல்வது என்ன?
ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று வெளியான தகவலுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் முழு ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், நாடெங்கிலும் உள்ள மாநிலம் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவைகளை செய்யும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், பல கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், பொது இடங்களுக்கு வந்து பொருட்களை வாங்குவோர் சமூக இடைவேளியை பின்பற்ற வேண்டும் எனவும் மாஸ்க் அணிந்துமட்டுமே வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முழு ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதியை கடந்தும் நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியானதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் முழு ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் தற்போது இல்லை எனவும் இதுபோன்று பகிரப்படும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment