கருணை மனு ஊதியஉயர்வுடன் பணிநிரந்தரம் செய்யவேண்டி கவர்னர் முதல்வர் கல்விஅமைச்சருக்கு அனுப்பி வரும் பகுதிநேர ஆசிரியர்கள். 110 வது விதியில் அறிவிப்பு வருமா என உருக்கம்.
கடந்த 2012ல் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 16 ஆயிரத்து 549
பகுதிநேர ஆசிரியர்கள், ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி, ஓவியம்,
கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி போன்ற
கல்விஇணைச்செயல்பாடு பாடங்களில் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கி
நியமிக்கப்பட்டனர்.
10வது கல்விஆண்டு ஜீன்-2020ல் தொடங்கவுள்ள நிலையில் இவர்களுக்கு
தற்போதுவரை ரூ.7 ஆயிரத்து 700 மட்டுமே தொகுப்பூதியமாக கிடைக்கிறது.
இவர்களில் மரணம், பணிஓய்வு, பணி ராஜினாமா என கிட்டதட்ட 5ஆயிரம்
காலியிடங்கள் ஏற்பட்டு 16549 பேரில் தற்போது 12ஆயிரத்திற்கும் குறைவான
பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாக தெரிகிறது.
இவ்வகை ஆசிரியர்களுக்குரிய ஊதியம் மற்றும் பணி குறித்து
அடுத்தக்கட்மத்திற்கு இன்னும் கொண்டுசெல்லப்படாமல் உள்ளதால் மிகுந்த
கவலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். முதல்வரின் 110 விதி அறிவிப்பின்படி
மே மாதம் சம்பளம், பணிநியமன அரசாணை 177ன்படி நான்கு பள்ளிகளில் வேலை,
இறந்தவர் குடும்பங்களுக்கும் மற்றும் 58 வயது பணிஓய்வில்
சென்றவர்களுக்கும் ரூ.3லட்சம் குடும்பநலநிதி, மகளிருக்கு
மகப்பேறுகாலவிடுப்பு, 7வது ஊதியக்குழு ஆணைப்படி 30சதவீத ஊதியஉயர்வு,
அருகில் உள்ள பள்ளிக்கு பணிமாறுதல் போன்றவற்றை இவர்கள் தொடர்ந்து
கோரிக்கை வைத்து வந்தாலும் அரசு போதிய கவனம் செலுத்தி தீர்வு காணாமல்
உள்ளது மேலும் கவலையாக உள்ளதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
.
இது தவிர, 2017ம் ஆண்டு ஜீன், ஜீலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில்
மாண்புமிகு பள்ளிக்கல்விஅமைச்சர் செங்கோட்டையன் பகுதிநேர ஆசிரியர்களை
பணிநிரந்தர செய்ய அரசு பரிசீலித்து வருகிறது எனவும், மேலும் பணிநிரந்தரம்
செய்ய கமிட்டி 3 மாதத்திற்குள் அமைக்கப்படும் எனவும் அறிவித்து
வெளியிட்டார். ஆனால் 2 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை சட்டசபை அறிவிப்பை
நிறைவேற்றாமல், காலந்தாழ்த்தி வருவது பணிநிரந்தரத்தை நம்பியிருக்கும்
இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள்
பின்னர் கல்வித்துறையில் முழுநேரவேலையுடன் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
பகுதிநேரஎழுத்தர்கள் பின்னர் முழுநேரவேலையுடன் நிரந்தரம்
செய்யப்பட்டுள்ளனர். பகுதிநேர கிராம முன்சீப், கர்ணம், மணியக்காரர்,
கிராம்சை, தலையாரி, வெட்டியான் போன்றோர் பின்னர் முழுநேரவேலையுடன்
பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
பகுதிநேரமாக செயல்பட்டுவந்த இப்பணிகளை காலசூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்கள்
சேவைக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அந்தந்த
துறைரீதியாக பணிநிரந்தரம் செய்ததைப்போல, தற்போது கல்வித்துறையில்
பகுதிநேரமாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் இந்த 12ஆயிரம் பகுதிநேர
ஆசிரியர்களையும் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என
மேற்கோள்காட்டி கவர்னர், முதல்வர், துணைமுதல்வர், பள்ளிக்கல்வி
அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள், சட்டசபைக்குழு தலைவர்
உள்ளிட்டவர்களுக்கு தற்போது இவர்கள் மாநிலம் தழுவிய அளவில் கருணை
மனுக்களை அனுப்பி வருகின்றனர்.
மாணவர்கள் கல்விநலனுக்காக நியமிக்கப்பட்ட இவ்வகை ஆசிரியர்களை தற்போதுள்ள
வாரம் 3 அரைநாட்கள் வேலை என்பதை நீட்டித்து, ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம்
செய்ய அரசு முன்வரவேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாக இருந்து
வருகிறது.
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில
ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் இதுகுறித்து கூறியது,
தமிழகத்தில் 2020 - 2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டு கல்வி மானியக்கோரிக்கை மார்ச் 12ந்தேதி நடைபெற்றது.இதில்
முன்னால் அமைச்சர் பொன்முடி அவர்கள் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை அரசு
ஏற்கனவே அறிவிப்பு செய்தபடி பணிநிரந்தரம் செய்யக்கோரிக்கை வைத்துபோது,
இதுகுறித்து பிறகு பேசுவோம் என்று பதிலளித்துள்ளார்.
அதேபோல ஆற்காடு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் பகுதிநேர
ஆசிரியர்கள் பணிநிரந்தரம் குறித்து பேசும்போதும், இதுகுறித்து பிறகு
பேசுவோம் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் பதிலளித்துள்ளார்.
கல்வி மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்பு பகுதிநேர ஆசிரியர்களுக்கு
வரும் என அனைவருமே எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் பள்ளிக்கல்வி
அமைச்சரின் பதிலால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகிறோம். இதனை
மறுபரிசீலனை செய்து அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும்.
இலவச மற்றும் கட்டாய கல்வியை மேம்படுத்த மத்தியஅரசின் திட்ட வேலையில்
தமிழகஅரசு பள்ளிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 12 ஆயிரம் உடற்கல்வி, ஓவியம்,
கணினி உள்ளிட்ட 8 பாடப் பகுதிநேர ஆசிரியர்களை ஊதிய உயர்வுடன்
பணிநிரந்தரம் செய்வதற்கு இறுதி வடிவம் கொடுக்க வேண்டும் என தமிழகஅரசை
வலியுறுத்தி கருணைமனுவை பகுதிநேர ஆசிரியர்கள் கவர்னர், முதல்வர்,
துணைமுதல்வர், கல்விஅமைச்சர்,பணியாளர் நிருவாக சீர்திருத்த அமைச்சர்,
கல்வித்துறை அதிகாரிகள், ஊதிய குறை தீர்க்கும் குழு தலைவர் மற்றும்
சட்டசபை குழுதலைவர் என 10 பேருக்கு தமிழகம் முழுவதும் அனுப்பி
வருகின்றனர். இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.
16549 பேரில் தற்போது சுமார் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிந்து
வருகிறோம். தற்போது கொடுக்கப்படும் ரூ.7700 தர அரசுக்கு மாதம் ரூ.9கோடி
என 11 மாதங்களுக்கு சுமார் 100 கோடி செலவாகிறது. இது எங்களுக்கு
ஒதுக்கீடு செய்த ரூ.99கோடியைவிட 5ல் இருந்து 10 கோடி என்ற அளவிலேயே
கூடுதலாக செலவாகிறது. 10வது கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில்
நிதிஒதுக்கீடு அதிகப்படுத்தப்படாமல் கிட்டதட்ட ஆரம்ப நிலையிலேயே இருப்பது
இனியாவது கூடுதலாக்கப் படவேண்டும்.
மத்தியஅரசு 65 விழுக்காடு, மாநிலஅரசு 35 விழுக்காடு என்ற வகையில்
நிதிப்பங்கீடு இருந்தாலும், மாநிலஅரசான தமிழகஅரசே கூடுதலாக நிதிஒதுக்கீடு
செய்து, இந்த 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியர் நிலையில்,
இதே பாடங்களில் நிரந்தரப்பணியில் அமர்த்தப்பட்டுள்ள சிறப்பாசிரியர்கள்
நிலையில், ஆண்டுக்கு ரூ.300 கோடி நிதிஒதுக்கீடு செய்து மனிதநேயத்துடன்
பள்ளிக்கல்வி அமைச்சர் பரிந்துரை செய்து இதே பட்ஜெட் கூட்டத்தொடரில்
முதல்வர் அவர்களால் 110வது விதியின் கீழ் அறிவுப்பு செய்து 12 ஆயிரம்
பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் காத்திட பணிநிரந்தரம்
செய்ய வேண்டும் என தமிழகஅரசை வேண்டிக் கொள்வதாக கூறினார்.
தொடர்புக்கு
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் 9487257203
No comments:
Post a Comment